நேதாஜி பிறந்த நாளை தேசப்பற்று தினமாக அறிவிக்க இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தல்

நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பிறந்த தினமான ஜனவரி 23-ந் தேதியை தேசப்பற்று தினமாக அறிக்க வேண்டும் என இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக், புரட்சி சோசலிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)-லிபரேசன் கட்சி ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1943 அக்டோபர் 21 அன்று தென்கிழக்கு ஆசிய மண்ணில் தற்காலிக விடுதலை இந்திய அரசாங்கத்தை நிறுவினார் என்பது ஒரு வரலாற்று உண்மையாகும். அன்றைய தினம் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும்.

நேதாஜியின் தற்காலிக விடுதலை இந்திய அரசாங்கம், பிரிட்டனுக்கு எதிராகவும், அமெரிக்காவிற்கு எதிராகவும் யுத்தப் பிரகடனம் செய்தது. நேதாஜியின் விடுதலை இந்தியாவை அயர்லாந்து உட்பட ஒன்பது நாடுகள் அங்கீகரித்தன. விடுதலை இந்திய அரசாங்கம் என்பதன் பதாகையின்கீழ் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், 30 லட்சம் இந்திய தேசிய ராணுவத்தினருடன் பிரிட்டிஷாரை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவதற்கான இறுதி யுத்தத்தைத் துவங்கினார்.

லெப்டினன்ட் கர்னல் எஸ்.ஏ. மாலிக் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் இந்திய மண்ணுக்குள் நுழைந்து, 1944 ஏப்ரல் 14 அன்று மணிப்பூரில் (மொய்ராங்கில்) இந்திய தேசியக் கொடியை ஏற்றியது. அங்கே இந்திய தேசிய ராணுவ அரசாங்கம் மூன்று மாதங்களுக்கும் மேலாக சொந்தமான வங்கி, கரன்சி, அஞ்சலகம் மற்றும் இதர கட்டமைப்புவசதிகளுடன் ஆட்சி செய்தது. அங்கிருந்த இந்திய தேசிய ராணுவம் தன்னுடைய இறுதித் தாக்குதலை இம்பாலிலிருந்து துவக்கியது.

இறுதியாக, நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் மேற்கொண்ட போராட்டத்தின் தாக்கம் இந்தியாவிலும் 1945 நவம்பர் முதல் 1946 ஜூலை வரையிலும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரிட்டிஷாருக்கு எதிராக ஆவேச உணர்ச்சிகளை ஏற்படுத்தியது. இதுதான் பிரிட்டிஷாரை 1947 ஆகஸ்ட்டில் அதிகாரத்தை இந்தியர்களிடம் ஒப்படைப்பதற்கு மற்ற காரணிகளுடன் மிகவும் முக்கிய காரணியாக அமைந்தது.

இந்த ஆண்டு அக்டோபர் 21 அன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தற்காலிக விடுதலை இந்திய அரசாங்கம் அமைக்கப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, மாபெரும் புரட்சித் தலைவரும், நாட்டுப்பற்று மிகுந்த தலைவருமான நேதாஜிக்கு ஒட்டுமொத்த நாடும் தன்னுடைய மரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்தியது. இந்தத்தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி, முதன்முறையாக, நேதாஜி மற்றும் அவருடைய விடுதலை இந்திய அரசாங்கம் ஆகியவற்றின் நினைவைப் போற்றும் விதத்தில் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். இந்த சமயத்தில் அவர் நீண்ட நேரம் உரைநிகழ்த்தினார். ஆனாலும், நேதாஜி தன்னுடைய விடுதலை இந்திய அரசாங்கத்திலும், இந்திய தேசிய ராணுவத்திலும் அமல்படுத்திய தேசிய ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவை குறித்து எதுவுமே கூறாது தவிர்த்துவிட்டார். இந்திய தேசிய ராணுவம் மீதான விசாரணைதான் மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கையை அதிகரித்திடவும், பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு எதிராக இறுதித் தாக்குதலை நடத்திடவும் மிகவும் தூண்டுகோலாக அமைந்தன.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றி, யுத்தக் கைதிகளாகக் கைது செய்யப்பட்ட, கர்னல் பிரேம் சாகல், கர்னல் குர்பாக்ஸ் சிங் தில்லான் மற்றும் மேஜர் ஜெனரல் ஷா நவாஷ் கான் ஆகியோர் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு ஆதரவாக, “சாகல்-தில்லான்-ஷா நவாஷ் புகழ் ஓங்குக” என்று நேதாஜி முழக்கமிட்டது நாட்டிலுள்ள அனைத்து மக்களின் மத்தியிலும் மதவேறுபாடின்றி, சாதி வேறுபாடின்றி, பாலின வேறுபாடின்றி ஒன்றுபட்டு நின்று சுதந்திரத்திற்காகப் போராடுவதற்கான உணர்வினை ஏற்படுத்தியது. ஆனால் நரேந்திர மோடியோ, மதவெறித் தீயைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கும் ஓர் அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குகிறார். இவர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள வெறுப்பு மற்றும் வன்முறை நடவடிக்கைகள் முஸ்லீம்கள், தலித்துகள் மற்றும் மதச்சிறுபான்மையினர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைத் தொடுப்பதற்கு இட்டுச் சென்றுள்ளன. எனவே இப்படிப்பட்ட நபரான மோடி, நேதாஜியையும் இந்திய தேசிய ராணுவத்தையும் கொண்டாடுவது என்பது கபடத்தனமானதும், வீண் வேலையுமாகும்.

நாட்டு மக்களால் மிகவும் நேசிக்கப்படும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்து மக்கள் மத்தியில் எண்ணற்ற கோரிக்கைகள் நீண்டகாலமாக உண்டு. நேதாஜி மீது மோடிக்கு உண்மையிலேயே பற்றும் பாசமும் இருக்கமானால் அவற்றை அவர் உடனடியாக நிறைவேற்றிட முன்வரவேண்டும்.

கோரிக்கைகள்:

(1) நேதாஜி பிறந்த தினமான ஜனவரி 23 தினத்தை “தேசப்பற்று தினம்” என அறிவித்திட வேண்டும். அது வேலையின்றி வறுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு புத்திளமையூட்டிடும்.

(2) நேதாஜியின் தற்காலிக விடுதலை இந்திய அரசாங்கம், அவருடைய இந்திய தேசிய ராணுவம் மற்றும் இந்திய சுதந்திர இயக்கத்திற்கு அவருடைய பங்களிப்புகள் முதலானவற்றை அதிகாரபூர்வமான முறையில் தொகுத்திட அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.

இவற்றைச் செய்திடாமல், மேலே கூறியவாறு மோடி மேற்கொண்டுள்ள பாவனைகள் மட்டுமே செய்வது என்பது, உள்நோக்கம் கொண்டவை என்றும் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான சூழ்ச்சியே என்றும்தான் கருதப்படும்.

இவ்வாறு இடதுசாரிக் கட்சிகள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds