வங்கக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: நாளை மறுநாள் முதல் மழை எச்சரிக்கை

Rain warning to TN

by Mathivanan, Dec 2, 2018, 16:01 PM IST

தென்கிழக்கு வங்கக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தமிழகத்துக்கு நாளை மறுநாள் முதல் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு வங்க கடற்பரப்பில் காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது. மேலும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் வருகிற 6-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகிறது.

இதனால் தென் ஆந்திரா, வட தமிழகத்தில் மழை பெய்யும். நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும்; கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன், தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் வரும் 4-ந்தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், 5-ந்தேதி வட தமிழகத்திலும், உள் மாவட்டங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றார்.

You'r reading வங்கக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: நாளை மறுநாள் முதல் மழை எச்சரிக்கை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை