உடை மற்றும் வெளிநாட்டு பயண போதைகளுக்கு பிரதமர் மோடி அடிமையாகிவிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதற்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் எச். ராஜா கூறியதாவது:
30 ஆண்டுகளாக தமிழ் மக்களை சினிமா மோகத்தில் ஆழ்த்திய கமல்ஹாசனுக்கு மத்திய அரசை விமர்சிக்க தகுதி இல்லை. பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் ஸ்டாலின் விமர்சிப்பதை நிறுத்தாவிட்டால் திமுகவை தோலுரித்துக் காட்டுவோம்,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குழப்பத்தில் இருக்கிறார். நாகரீகமற்ற முறையில் பிரதமர் மோடியின் உடையை விமர்சிக்கிறார். அரசியல் லாபத்துக்காக சில அரசியல் கட்சிகள் நாடகம் ஆடுகின்றன. மக்கள் அவர்களை நம்ப மாட்டார்கள். நம்பவும் கூடாது.
காங்கிரஸ் கட்சி எங்கே இருக்கிறது என்று தேடும் நிலை உள்ளது. இந்த நிலையில் 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் வெல்லும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறி இருப்பது நகைச்சுவையாக இருக்கிறது.
இவ்வாறு எச். ராஜா கூறினார்.