செங்கல் சூளைகளால் சுற்றுச் சூழல் மாசடைவதால் செங்கற்களை பயன்படுத்தி கட்டிடங்கள் கட்டுவதற்கு நாடு முழுவதும் தடை விதிப்பது குறித்து ஆராய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய கட்டுமான மற்றும் நகர விவகாரத்துறை அமைச்சகம், மத்திய பொதுப்பணித்துறை அமைச்சகத்துக்கு ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், செங்கல் கட்டுமானங்களை தடை செய்வது ஆராய்ந்து முடிவு அனுப்புங்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பல்லாயிரம் ஆண்டுகளாக செங்கல் பயன்பாடு இருந்து வருகிறது. இந்த செங்கல் சூளைகளை நம்பி பல லட்சம் கூலித் தொழிலாளர்கள் வாழ்க்கை அமைந்துள்ளது.
இப்போது திடீரென செங்கல் சூளைகளால் சுற்றுச் சூழலுக்கு ஆபத்து என்கிறது மத்திய அரசு. நவீன தொழில்நுட்பத்துடன் சுற்றுச் சூழலுக்கு உகந்த செங்கற்களை தயாரிப்பது குறித்து ஆராய்கிறதாம் மத்திய அரசு.
ஆக செங்கல் சூளைகளுக்கும் கொள்ளி வைக்க முடிவெடுத்துவிட்டது மத்திய பாஜக அரசு,