10 பகவத் கீதை புத்தகத்தின் விலை ரூ.3.8 லட்சமா? - பாஜக அரசு தில்லுமுல்லு

ஹரியானா மாநில அரசு 10 பகவத்கீதை புத்தகங்களை வாங்க ரூ. 3 லட்சத்து 80 ஆயிரம் செலவிட்டதாகா கணக்குக் காட்டியுள்ளது.

Jan 12, 2018, 07:18 AM IST

ஹரியானா மாநில அரசு 10 பகவத்கீதை புத்தகங்களை வாங்க ரூ. 3 லட்சத்து 80 ஆயிரம் செலவிட்டதாகா கணக்குக் காட்டியுள்ளது.

ஹரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் அண்மையில் கலை நிகழ்ச்சிகளுடன் கூடியமாபெரும் மகாபாரத விழாவை, ஆளும் பாஜக அரசு நடத்தியது. ஹிசாரைச் சேர்ந்த ராகுல் ஷெராவத் என்பவர் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கான காண்ட்ராக்ட்டுகளை ரூ. 15 கோடிக்கு எடுத்திருந்தார்.

இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. இதனிடையே, குருஷேத்திரம் விழா தொடர்பான செலவு விவரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்டு இருந்தது.

அதில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படிம், “மகாபாரதம் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் உமாபாரதி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஹரியானா, இமாச்சலப்பிரதேச ஆளுநர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் 10 பேருக்கு பகவத்கீதை புத்தகங்கள் பரிசாக கொடுக்கப்பட்டதாகவும், இந்த 10 புத்தகங்களை வாங்குவதற்கான ரூ. 3 லட்சத்து 80 ஆயிரம் செலவிட்டதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விழாவில் ‘ராதா-கிருஷ்ணன்’ நாட்டிய நாடகத்தில் பங்கேற்றுநடனம் ஆடிய நடிகையும், பாஜக எம்எல்ஏவுமான ஹேமமாலினிக்கு ரூ. 15 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

You'r reading 10 பகவத் கீதை புத்தகத்தின் விலை ரூ.3.8 லட்சமா? - பாஜக அரசு தில்லுமுல்லு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை