ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேல் திடீரென ராஜினாமா செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும அவ்வபோது மோதல் போக்கு இருந்து வருகிறது. இதனை நிரூபிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
ராஜினாமா செய்ததற்கு, தான் எடுத்த தனிப்பட்ட முடிவே காரணம் என்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவி வகித்ததை பெருமிதமாக நினைப்பதாகவும் தனது ராஜினாமா கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது பதவி காலத்தில் ரிசர்வ் வங்கி பல்வேறு ஏற்றங்களை அடைந்துள்ளது. அதற்கு காரணமாக இருந்து ஒத்துழைப்பு அளித்த அதிகாரிகளையும், நிர்வாகிகளையும் கடுமையாக உழைத்த இதர பணியாளர்களையும் நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்து கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.