ஸ்ருதி ஹாசனின் ஹலோ சகோ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷங்கர், முதல்வன் 2 படத்திற்கு இளைய ஹீரோ தேவைப்பட்டால் விஜய் தான் என் சாய்ஸ் என தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 இரண்டு வாரங்களில் உலகம் முழுவதும் 635 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை ஈட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷங்கர் அடுத்ததாக கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 பட வேளைகளில் பிசியாகி விட்டார். இந்நிலையில், ஸ்ருதி ஹாசன் தொகுத்து வழங்கும் ஹலோ சகோ நிகழ்ச்சிக்கு விருந்தினராக இயக்குனர் ஷங்கர் பங்கேற்றார்.
அங்கு தனக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஷங்கர் முதல்வன் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி எழுந்த கேள்விக்கு பதில் கூறினார்.
முதல்வன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாகவும் இந்தியன் 2 படத்தை தொடர்ந்து அந்த படத்தை எடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். அந்த படத்தில் யார் ஹீரோ என்ற கேள்விக்கு ரஜினி, கமல் வைத்து எடுக்க நினைத்துள்ளதாகவும். ஆனால் முதல்வன் 2 கதைக்கு இளம் ஹீரோ தேவைப்பட்டால், விஜய்யை வைத்து எடுப்பேன் என சற்றும் யோசிக்காமல் கூறியுள்ளார்.
ஏற்கனவே விஜய்யை வைத்து நண்பன் எனும் படத்தை ஷங்கர் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு உற்சாக மூட்டியுள்ளது.