ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசுடனான மோதல் போக்கால் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் தமது பதவியை ராஜினாமா செய்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது புதிய ரிசர்வ் வங்கி ஆளுநராக தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 3 ஆண்டுகள் அவர் இப்பதவியில் நீடிப்பார்.
தமிழக பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாக காஞ்சிபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியராக பணிபுரிந்தார்.
அதேபோல் தமிழக அரசின் எல்காட் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களில் பதவி வகித்தவர் சக்தி காந்த தாஸ். மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகராகவும் அவர் பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார்.
2016-ம் ஆண்டு அப்போதைய தமிழக அரசின் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் நீக்கப்பட்ட நிலையில் அப்பதவிக்கு சக்தி காந்த தாஸ் பெயர் அடிபட்டதும் குறிப்பிடத்தக்கது.