பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள், பல கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக சசிகலா மற்றும் இளவரசி குடும்பத்தினரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சசிகலாவிடமும் விசாரணை நடத்த முயற்சித்தனர்.
ஆனால் தாம் மவுன விரதம் இருப்பதாக சசிகலா கூறி விசாரணக்கு ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று சசிகலாவிட்ம் 8 மணிநேரத்துக்கும் மேலாக பெங்களூரு சிறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.