விவசாயிகளின் பிரச்னைகளை செவிமடுக்காத அமைச்சர்களை வெங்காயத்தால் அடித்து எதிர்ப்பை தெரிவியுங்கள் என்று நவநிர்மாண் சேவா தலைவர் ராஜ் தாக்கரே பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் அதிக அளவில் வெங்காயம் விளைவிக்கப்படுகிறது. தற்போது வெங்காயத்திற்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெங்காய விவசாயிகளுக்கு ஆதரவாக மாவட்டத்தின் கடந்த 2 நாட்களாக நவநிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
விவசாயிகளின் இன்னல்களை கண்டு கொள்ளாமலும், கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமலும் உள்ள அமைச்சர்களை வெங்காயத்தாலேயே அடியுங்கள் என்று விவசாயிகளிடம் ஆவேசத்துடன் கூறினார். ராஜ் தாக்கரேவின் இந்தப் பேச்சு மகாராஷ்டிராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.