மகாராஷ்டிராவில் பா.ஜ.க - சிவசேனா வார்த்தைப் போர் உச்சகட்டம்!

Shivsena teased BJP maharashtra

by Nagaraj, Jan 7, 2019, 10:41 AM IST

மகாராஷ்டிராவில் பா.ஜ.க - சிவசேனா இடையே மோதல் முற்றியுள்ளது. கூட்டணியின்றி அமோக வெற்றி பெறுவோம் என பா.ஜ.கவும், ஓட்டு மெஷினுடன் பா.ஜ.க. கூட்டு வைத்தால் தான் சாத்தியம் என சிவசேனாவும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளது மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.க.வுக்கும் சிவசேனாவுக்கும் இடையே சமீப காலமாக முட்டல் ,மோதல் அதிகரித்து வருகிறது. வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறது சிவசேனா . முக்கியமாக ராமர் கோயில் கட்டுவது பற்றி முதலில் முடிவை அறிவியுங்கள், கூட்டணி பற்றி அப்புறம் முடிவு செய்யலாம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கண்டிப்பு காட்டியது பா.ஜ.க.வை சூடேற்றி விட்டது.

இந்நிலையில் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா நேற்று மகாராஷ்டிராவில் பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். இதில் பேசிய மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ், கூட்டணிக்காக காத்துக் கிடக்க வேண்டியதில்லை. பா.ஜ.க தனித்தே போட்டியிட்டு 48 தொகுதிகளில் 40-ல் வெல்ல முடியும் என்றார். தொடர்ந்து பேசிய அமித்ஷா, கூட்டணி பற்றி கவலை வேண்டாம். நம்முடன் கூட்டணி சேருபவர்களை வெற்றி பெற வைப்போம். இல்லாவிட்டால் மண்ணைக் கவ்வச் செய்வோம் என்று சிவசேனாவுக்கு சிவசேனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் தனித்தே போட்டியிட்டு கடந்த தேர்தலை விட கூடுதலாக வெற்றி பெறுவோம். உ.பி.யிலும் பகுஜன் - சமாஜ்வாதி கூட்டணி சேர்ந்தாலும் கடந்த தேர்தலில் 73 தொகுதிகளில் வென்றதைக் காட்டிலும் கூடுதலாக ஒரு தொகுதியில் வெற்றி பெறுவோம் என்றார். அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு சிவசேனா உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது. கூட்டணி வேண்டாம் என்றால் ஓட்டு மெஷினுடன் கூட்டு சேரப்போகிறார்களா? என்று சிவசேனா கிண்டல் அடித்துள்ளது. மேலும் அமித் ஷாவின் பேச்சு எதேச்சாதிகாரத்தைக் காட்டுகிறது.

மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வை துடைத்தெறிவோம் என்று சிவசேனாவும் பதிலடி கொடுத்துள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் முற்றியுள்ளதால் இனி கூட்டணிக்கான வாய்ப்பு முறிந்து விட்டதாகவே கருதப்படுகிறது. இதனால் மத்தியிலும், மாநிலத்திலும் அமைச்சரவையில் பங்கேற்றுள்ள சிவசேனா எந்த நேரத்திலும் வெளியேறும் என்று தெரிகிறது.

You'r reading மகாராஷ்டிராவில் பா.ஜ.க - சிவசேனா வார்த்தைப் போர் உச்சகட்டம்! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை