மீண்டும் எடப்பாடி தான் முதல்வராம் : கிளி ஜோதிடர் ஆருடம்

Advertisement

வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா? முதல்வராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் பதவி ஏற்பாரா? எனக் கரூரில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கிளி ஜோதிடம் பார்த்தார்.கரூர் அடுத்த ஏமூர் கிராமத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடந்தது.இதில், கலந்து கொண்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டிகளை ஓட்டி பாரம்பரிய பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.அப்போது அங்கு வந்த கிளி ஜோதிடர் ஒருவரை வழிமறித்து வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா ?. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவாரா? எனக் கிளி ஜோதிடரிடம் கேட்டார்.

ஜோதிடரின் கிளி எடுத்த படத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன் ஒருங்கிணைந்த படங்கள் வந்தது, இதைப் பார்த்த கிளி ஜோதிடர் உலகை ஆளும் சிவனே குடும்பத்தினருடன் வந்துள்ளதால், இனி தமிழகத்தை ஆளப்போவதும் இப்போதைய முதல்வர் பழனிசாமி தான் எனக் கூற அங்கிருந்த அதிமுகவினர் உற்சாகத்துடன் கோஷங்களை எழுப்பினர்.

Advertisement

READ MORE ABOUT :

/body>