ஹலோ ருச்சி கார்னர் வியூவர்ஸ்.. இன்னைக்கு நாம் காரசாரமான மிளகு ரசம் எப்படி செய்வதென்று பார்க்கப் போறோம்..
தேவையான பொருட்கள்:
கொத்துமல்லி
கருவேப்பிலை
தக்காளி அரைத்தது
புளி
கடுகு
சீரகம்
மிளகு
பூண்டு
மஞ்சள் தூள்
காய்ந்த மிளகாய்
வெந்தயம்
பெருங்காயத்தூள்
உப்பு
செய்முறை:
முதலில் மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பிறகு அரைத்து வைத்த மிளகு, சீரகம், பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். இத்துடன் பெருங்காயத் தூள் அரைத்து வைத்த தக்காளி விழுது ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு, புளிக் கரைசலுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், கொத்துமல்லி, உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.
அவ்ளோதாங்க.. அம்மாவின் கை பக்குவத்தில் காரசாரமான மிளகு ரசம் ரெடி..!