ஹெல்தி ட்ரிங்க் வெள்ளரி லெஸ்ஸி

Healthy Drink Cucumber Lassie recipe

by Isaivaani, Feb 20, 2019, 21:41 PM IST

உடலுக்கு குளிர்ச்சித் தரும் வெள்ளரி லெஸ்ஸி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

நறுக்கின வெள்ளரிக்காய் - அரை கப்
தயிர்                                     - அரை கப்
சர்க்கரை                             - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு                                    - ஒரு சிட்டிகை

செய்முறை:

வெள்ளரிக்காய் தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு ஜாரில் வெள்ளரிக்காய் துண்டுகளுடன் தயிர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

அத்துடன், சர்க்கரை, உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டி டம்ளரில் ஊற்றி ப்ரிட்ஜில் வைத்து ஜில்லுனு பருகவும்.

அவ்ளோதாங்க.. உடலுக்கு குளிர்ச்சித் தரும் வெள்ளரி லெஸ்ஸி ரெடி..!

You'r reading ஹெல்தி ட்ரிங்க் வெள்ளரி லெஸ்ஸி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை