குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மாலை நேர தின்பண்டமான தேங்காய் லட்டு எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் - 1 கப்
கண்டென்ஸ்ட் பால் - 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் போடி - அரை டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
புட் கலர் - 1 துளி
செய்முறை :
ஒரு வாணலியில், நெய் விட்டு அது உருகியதும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறவும்.
தேங்காயின் நிறம் மாறாமல் மொறு மொறுப்பாக ஆனதும் ஏலக்காய் போடி சேர்த்து நன்றாக கிளறவும்.
பின்னர், கண்டென்ஸ்ட் பால் அல்லது மில்க்மெய்டு சேர்த்து நன்றாக கிளறி அத்துடன் புட் கலர் சேர்த்து கிளறி இறக்கவும்.
இந்தக் கலவை லேசாக ஆறியதும் சிறிய உருண்டைகளாகப் பிடித்து மறுபடியும் தேங்காய் துருவலில் போட்டு எடுத்தால் சுவையான தேங்காய் லட்டு ரெடி..!