சைவப் பிரியர்களே.. தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு ஏற்ற மீல் மேக்கர் ஃபிரை ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மீல் மேக்கர் - 2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 1
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
சீரகம் - அரை டீஸ்பூன்
இஞ்சி - 1 டீஸ்பூன்
பூண்டு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சிரகத்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா -1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி
உப்பு
செய்முறை:
முதலில், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்க்கவும். தண்ணீர் சூடானதும், மீல் மேக்கர் சேர்த்து ந்னறாக வேகவிட்டு தண்ணீர் பிழிந்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில், எண்ணெய்விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம், இஞ்சி, பூண்டு போட்டு பொரித்ததும், பச்சை மிளகாய், கறி«விப்பிலை சேர்த்து வதக்கவும்.
பிறகு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். அத்துடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர், மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக கிளறி தக்காளி சேர்த்து பச்சை வாசனைப் போகும் வரை வதக்கவும்.
அத்துடன், மீல் மேக்கர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி சுமார் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
இறுதியாக, கொத்தமல்லித்தூவி இறக்கினால் சுவையான மீல் மேக்கர் ஃபிரை ரெசிபி ரெடி..!