சருமம் பளபளவென்று மிளிர வேண்டுமா?

Want to make your skin shiny

Apr 19, 2019, 16:57 PM IST

சினிமா ஸ்டார் போல இல்லையென்றாலும் கொஞ்சமாவது பளபளப்பாக தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்குள்ளும் இருக்கும். இதற்காக பல முயற்சிகளை எடுக்கிறோம். கடைகளில் கிடைக்கும் வேதிப்பொருள்கள் அடங்கிய சரும பூச்சுகளை பயன்படுத்துகிறோம். பல நேரங்களில் இவை சருமத்திற்கு நன்மைக்குப் பதிலாக தீமையை செய்து விடுகிறது.


நம் உடலின் தோலை இயற்கையான விதத்தில் பளபளப்பாக்க ஒரு வழி இருக்கிறது. நல்ல தரமான தேன் பருகுவது பளபளப்பான சருமத்தை அளிக்கும். பொதுவாக இனிப்பான உணவுகள் அதிக ஆற்றலை (கலோரி) உள்ளடக்கியிருப்பதால் ஆரோக்கியத்திற்கு ஏற்றவையல்ல. ஆனால் இனிப்புச் சுவை கொண்ட தேன் ஆரோக்கியமானதாகும். கலப்படமில்லாத, தரமான தேன் கரிம அமிலங்கள் மற்றும் ஆக்சிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்சிடண்டுகள் அடங்கியது. தினமும் சம அளவில் தேன் பருகுவது சருமத்தை ஜொலிக்க செய்யும்.


தேனின் ஏனைய பலன்கள்:

  • ஆன்ட்டிஆக்சிடண்டுகள் அடங்கியிருப்பதால் தேனுக்கு புற்றுநோயை தடுக்கக்கூடிய இயல்பு உண்டு. இரத்த கொதிப்பு என்னும் உயர் இரத்த அழுத்த பாதிப்பு வராமல் தேன் பாதுகாக்கும்.
  • இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.
  • உடல் எடையை குறைப்பதாலும், குறையடர்த்தி கொண்ட கொலஸ்ட்ரால் (எல்டிஎல்) அளவை குறைப்பதாலும் இதய நோய் வராமல் தேன் காப்பாற்றுகிறது.
  • கண்பார்வையை கூர்மையாக்குதல், ஆண்மை குறைவை குணமாக்குதல், வயிற்றுப்போக்கினை நிறுத்துதல் ஆகிய மருத்துவ குணங்கள் அடங்கியது தேன்.
    பாக்டீரியா என்னும் நுண்ணுயிரிகள் உருவாகிறதை தடுக்கக்கூடிய ஹைட்ரஜன் பெராக்சைடை தேன் வெளியேற்றும். ஆகவே தேன் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்.
  • தூக்கமின்மையை போக்கி ஆழ்ந்த உறக்கத்தை தரக்கூடிய ஆற்றல் தேனுக்கு உண்டு

துரித உணவுகள் தூக்கி வரும் கோளாறுகள்

You'r reading சருமம் பளபளவென்று மிளிர வேண்டுமா? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை