சட்டுனு செய்யலாம் வெங்காய போண்டா ரெசிபி

Crispy Onion Bonda Recipe

by Isaivaani, Apr 22, 2019, 21:33 PM IST

வீட்டிலேயே ரொம்ப சுலபமா செய்யக்கூடிய வெங்காய போண்டா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - ஒரு கப்

அரிசி மாவு - கால் கப்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - ஒரு துண்டு

மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்

பெருங்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்

கொத்தமல்லி

கறிவேப்பிலை

எண்ணெய் - பொரிப்பதற்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், பேக்கிங் சோடா, உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி போண்டா மாவு பதத்துக்கு தயார் செய்யவும்.

பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை உருண்டைகளாக போட்டு பொரித்து எடுக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான வெங்காய போண்டா ரெடி..!

You'r reading சட்டுனு செய்யலாம் வெங்காய போண்டா ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை