சமோசா உருளைக்கிழங்கு லாலிபாப் சேவ்புரி உள்ளிட்ட உணவு வகைகளுக்கு ஏற்ற சைட் டிஷ் சாட் சட்னி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
துருவிய வெல்லம் அரை கப்
ஆம்சூர் பவுடர் 4 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை 4 டேபிள் ஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்
சுக்குத் தூள் அரை டேபிள் ஸ்பூன்
விதை நீக்கிய பேரீச்சம்பழம் 6
உப்பு தேவையான அளவு
செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கப் அளவு தண்ணீர் விட்டு, ஆம்சூர் பவுடர் சேர்த்து கிளறவும்.
பவுடர் நன்றாக கலந்து வந்ததும் சர்க்கரை, வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர், பொடியாக நறுக்கிய பேரீச்சை, சில்லி ப்ளேக்ஸ், உப்பு, கரம் மசாலா, சீரகத் தூள், சுக்கு தூள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து கொதிக்க விடவும்.
எல்லாம் சேர்ந்து நிறம் மாறி கலவை கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
அவ்வளவுதாங்க சுவையான சாட் சட்னி ரெடி..!