சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் முட்டை அடை எப்படி செய்றதுன்னு பார்களாம்..
தேவையான பொருட்கள்:
முட்டை - 4
பெரிய வெங்காயம் - ஒன்று
கடலை மாவு - 100 கிராம்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - ஒன்று
கொத்தமல்லித்தழை கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக்கொள்ளவும்.
பிறகு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின்னர், கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கி அடை மாவு பதத்திற்கு தயார் செய்யவும்.
இதையடுத்து, தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி முட்டை கலவையை ஊற்றி அடை போல் பரப்பி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான முட்டை அடை ரெடி..!