ஸ்னாக் பிரியர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய, வெங்காய சீஸ் ரிங்ஸ் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 3
சீஸ் - தேவையான அளவு
ப்ரெட் க்ரம்ப்ஸ் - ஒரு கப்
சோள மாவு - ஒரு கப்
முட்டை - 3
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில், வெங்காயத்தை ஒரு இன்ச் அளவில் வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும். தற்போது, வெங்காயம் ஒவ்வொரு ரிங்காக (வட்டமாக) வரும்.
இதில், ஒரு பெரிய வட்ட வெங்காயத்தையும் அதனுள் சிறிய வட்ட வெங்காயத்தையும் வைத்துக் கொள்ளவும்.
பிறகு, இந்த இரண்டு வட்ட வெங்காயத்தின் நடுவில் இருக்கும் இடத்தை சுற்றி சீஸ் வைக்கவும்.
பின்னர், ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி , உப்பு சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
மற்றொரு கிண்ணத்தில் சோள மாவுடன் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
தற்போது, தயாராகவுள்ள வெங்காயத்தை எடுத்து சோள மாவில் பிரட்டி எடுத்து, பிறகு முட்டை கலவையில் முக்கி, பிரெட் க்ரம்ஸில் பிரட்டி வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காய ரிங்களை போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
இதனை, சாஸ் கொண்டு தொட்டு சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும்.