காண்டம் - காலாவதி தேதி உண்டா?

Is there a expiry date for condom?

by SAM ASIR, Aug 20, 2019, 16:27 PM IST

'காண்டம்' என்று அழைக்கப்படும் ஆணுறை, அத்தியாவசியான ஒரு பயன்பாட்டு பொருளாகும். வேண்டாத கர்ப்பத்தை தடுப்பதுடன், எய்ட்ஸ் போன்ற தீவிர நோய்கள் மற்றும் பால்வினை நோய்கள் தொற்றிவிடாமல் காத்துக்கொள்ளவும் இது உதவுகிறது.

ஆணின் விந்து பெண்ணுறுப்புக்குள் சென்றுவிடாமல் ஆணுறையின் நுனியிலேயே தங்கி விடும். இவை பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் எளிதாக கிடைக்கக்கூடியவை. சில ஆணுறைகள் விந்து வெளியாகும் நேரத்தை நீட்டித்து அதிக தாம்பத்ய இன்பம் பெறவும் உதவக்கூடியவை என்றும் கூறப்படுகிறது. பயமில்லாமல் முழு இன்பத்தை சுகிப்பதற்கு ஆணுறை உதவுகிறது.

ஆணுறை இவ்வளவு பயன்மிக்கதாய் இருந்தும், அதை சரியான இடத்தில் பத்திரமாக வைத்து பாதுகாக்காவிட்டால் பயனிழந்து விடும். பலருக்கு ஆணுறைக்கு காலாவதி தேதி உண்டு என்ற விஷயம் தெரியாமல் இருக்கக்கூடும். ஆணுறை பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்:

தோற்றம்

ஆணுறையை பயன்படுத்த எடுக்கும்போது நெகிழும் தன்மை குறைவாக இருப்பதாக அல்லது வறண்டு இருப்பதாக அல்லது கையில் ஒட்டிக் கொள்வதுபோல் உணர்ந்தால் பயன்படுத்த வேண்டாம். புதிய ஒன்றை வாங்குவது நன்று. நிறம் வெளிறி அல்லது பூஞ்சை பிடித்தது போன்ற மணம் இருந்தாலும் அந்த ஆணுறையை தவிர்க்கவும்.

உகந்த இடம்

தேவைப்படும்போது பயன்படுத்துவதற்காக ஆணுறையை வாங்கி பாதுகாப்பான இடத்தில் வைப்பது முக்கியம். சரியான இடத்தில் வைக்காவிட்டால் ஆணுறையில் கீறல் விழலாம் அல்லது வறண்டு போகலாம். குளிரான ஆனால் ஈரமில்லாத இடங்களில் ஆணுறையை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

கையாளுதல்

ஆணுறை, உயவு பொருள் மிகுந்ததாக, வழுக்கும் தன்மை கொண்டதாக இருந்தால்தான் உறவு இன்பமாக அமையும். பாக்கெட்டை பிரிப்பதற்கு கத்தரிக்கோலை பயன்படுத்தவேண்டாம். தவறிப்போய் அது ஆணுறையை கிழித்து விடக்கூடும். பிரிக்கும்போது விரல் நகங்கள் அல்லது கார் மற்றும் மோட்டார் சைக்கிள் இவற்றின் சாவி ஆணுறையை சேதப்படுத்திவிடாமல் கவனமாக இருக்கவேண்டும்.

காலாவதி தேதி

ஆணுறையை பயன்படுத்தும் முன்னர் காலாவதி தேதியை (எக்ஸ்பயரேஷன் டேட்) கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். காலாவதி தேதி நெருங்கும்போது தங்கள் மீட்சித்தன்மையை அவை இழந்து விடும். பார்ப்பதற்கு நன்றாக இருப்பதாக தோன்றினாலும், பயன்படுத்தும்போது கிழிந்துபோய் இக்கட்டான நிலையை ஏற்படுத்தி விடும். ஆகவே, வைத்திருக்கும் ஆணுறையின் காலாவதி தேதி நெருங்கினால் அதை தவிர்த்துவிடுவது நல்லது.

ஆணுறையை கவனிப்பதுபோன்று, தாம்பத்ய உறவின்போது என்ன உயவுப் பொருள் பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கியம். எண்ணெய் பசை மிக்க உயவுப் பொருளை பயன்படுத்தவேண்டாம். அது ஆணுறையை சேதப்படுத்திவிட வாய்ப்புண்டு. ஆணுறை போன்ற முக்கியமான விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது பிற்கால கவலைகளை தடுக்கும்

மது மற்றும் புகை பழக்கமுள்ளவரா? இதோ ஒரு நற்செய்தி

You'r reading காண்டம் - காலாவதி தேதி உண்டா? Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை