சுட.. சுட.. சிக்கன் பிரைட் ரைஸ்.. சூப்பர் ரெசிபி

Advertisement

சுட.. சுட.. சிக்கன் பிரைட் ரைஸ்.. சூப்பர் ரெசிபி.. எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..

 

தேவையான பொருட்கள்

பொருள்அளவு

பாசுமதி அரிசி 2 கப்
வெங்காயம் 2
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் அரை டீஸ்பூன்
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் கால் கிலோ
வெங்காய தாள் கால் கப்
முட்டை கோஸ் கால் கப்
கேரட் கால் கப்
பீன்ஸ் கால் கப்
குடை மிளகாய் 1(நறுக்கியது)
பச்சை பட்டாணி 1 டேபிள் ஸ்பூன்
மக்கா சோளம்1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
மிளகுத் தூள் அரை டீஸ்பூன்
சர்க்கரை அரை டீஸ்பூன்
பூண்டு பல்3
பச்சை மிளகாய் 2
முட்டை 1
மிளகு தூள் கால் டீஸ்பூன்

செய்முறை

வெங்காயம், முட்டைக் கோஸ், கேரட், குடை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும்.

ஒன்றுக்கு ஒன்று என்ற அளவில் தண்ணீர் சேர்த்து சாதமாக வடித்து எடுத்து, கிளறிவிட்டு உதிர்த்துக் கொள்ளவும்.

வாணலியில் வெண்ணெயை போட்டு உருக்கிக் கொள்ளவும்.

அதனுடன் சிறிது நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். பின்பு அதனுடன் இஞ்சி பூண்டு விழுதினையும் சேர்த்து வதக்கவும்.

அதில் சோயா சாஸ் ஊற்றி, உப்பு சேர்த்து கிளறிவிடவும்.

வாணலியில் சிறிது வெண்ணெய் போட்டு உருக்கி அதில் சர்க்கரை, நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பிறகு வெங்காயம் மற்றும் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.

சிக்கன் வெந்ததும், அதனுடன் முட்டை கோஸ், கேரட், மக்கா சோளம், பட்டாணி, வெங்காயத்தாள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். காய்களை நன்றாக வேகவிட வேண்டாம். பாதி வேக வைத்தால் போதுமானது.

பின்னர் அதனுடன் அதில் மிளகுத்தூள், உப்பு, சோயாசாஸ் சேர்த்து கலக்கி, அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி, கலக்கி அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கி, பின்னர் அதை தூளாக உதிர்த்துக் கொள்ளவும். கடைசியாக உதிர்த்து வைத்துள்ள சாதத்தை இதனுடன் சேர்த்து கிளறவும்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>