சீரக நீரில் ஒளிந்து இருக்கும் அதிசியங்கள்!!குடித்து பாருங்கள்...

cumin seeds benefits in tamil

by Logeswari, Sep 4, 2020, 17:52 PM IST

சீரகத்தில் இயற்கையாகவே ஆரோக்கிய தன்மைகள் அதிகமாக நிறைந்துள்ளது.தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை அருந்தி வந்தால் ஆரோக்கிய உடலுக்கு நாமே எடுத்துக்காட்டு...சுத்தமான நீரில் கொஞ்சமாக சீரகத்தை சேர்த்து நீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.கொதித்த நீரை இதமான சூட்டில் பருக வேண்டும் அவ்வாறு செய்தால் எவ்வகை பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்....

சீரக நீரில் உள்ள மகத்துவம்:-

பெண்கள் கருவை சுமக்கும் போது நிறைய உடல் மாற்றம் ஏற்படும்.அதில் முக்கியமானது செரிமானம்...எதை சாப்பிட்டாலும் குமட்டல்,வாந்தி போன்றவை ஏற்படும்.இதனை சரி செய்ய தினமும் சீரக நீரை அருந்தி வர வேண்டும்.

சீரக தண்ணீரில் அதிக இரும்பு மற்றும் நார் சத்து உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வளரும்..எந்த வகை கிருமிகளும் உடலை அண்டாது.

பெண்களின் மாதவிடாய் காலத்தில் எற்படும் வயிற்று வலியை போக்க சீரக தண்ணீர் சிறந்த மருந்தாக செயல்பட்டு வருகிறது.அது மட்டும் இல்லாமல் தசை பிடிப்புகளிருந்து இருந்து நிவாரணம் அளிக்கிறது.

முக சுருக்கம்,முகப்பரு,முடி வளர்ச்சி, சருமம் போன்றவற்றை மேன்மை அடைய சீரக நீர் பெரும் பங்கு வகிக்கின்றது.

நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் தினமும் தவிராமல் சீரக தண்ணீரை குடித்து வந்தால் உடலில் சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது..

You'r reading சீரக நீரில் ஒளிந்து இருக்கும் அதிசியங்கள்!!குடித்து பாருங்கள்... Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை