கோதுமை ரவையில் இட்லி செய்வது எப்படி??வாங்க சமைக்கலாம்...

by Logeswari, Sep 4, 2020, 17:44 PM IST

ரவையில் எந்த வகை உணவு செய்தாளும் அது சுவையாகவே இருக்கும்.சுவை மட்டும் இல்லாமல் ஆரோக்கியமும் சேர்ந்து கிடைக்கும் ஒரே உணவு ரவை.ரவையில் செய்த உணவை சாப்பிட்டால் உடல் எடையும் குறையுமாம்.அப்படிபட்ட ரவையில் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-

கோதுமை ரவை-1 கப்

புளித்த தயிர்-2 கப்

உப்பு -தேவையான அளவு

கேரட்-2-3

செய்முறை:-

கடாயில் 1 கப் ரவையை நன்றாக நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.

பின்பு அதில் தயிர்,உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு சுமார் 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

ஊறிய பிறகு அதில் நறுக்கிய கேரட் சேர்த்து இட்லி குக்கரில் மாவை ஊற்றி வேக வேண்டும்.

10 நிமிடங்கள் பிறகு சூடான,ஆரோக்கியமான கோதுமை இட்லி தயார்..


More Samayal recipes News

அதிகம் படித்தவை