நீண்ட ஆயுளை பெறுவதற்கு தினமும் ஒரு காய்கறி ஜுஸ்

நீண்ட ஆயுளை பெறுவதற்கு தினமும் ஒரு காய்கறி ஜுஸ்

by Logeswari, Sep 11, 2020, 19:20 PM IST

காய்கறிகளில் உள்ள சத்து வேறு எந்த உணவிலும் கிடைக்காது.இதில் உள்ள சத்துக்கள் மனிதனின் வாழ்வில் நீண்ட ஆயுளை பொழிகிறது.தினமும் ஒரு காய்கறி ஜூஸ் குடித்து வந்தால் உடம்பில் இரத்த ஓட்டத்தை மேன்மை படுத்தும். பழங்களில் உள்ளது போலவே காய்கறிகளிலும் அளவில்லாத நன்மை கிடைக்கின்றது.

காய்கறிகளில் கிடைக்கும் நன்மைகள்:-

காய்கறிகளை சமைத்து உன்பதை விட ஜூஸ்ஸாக குடிக்கும் பொழுது அதிக ஊட்டச்சத்து கிடைக்கின்றது.உடலில் நீர் சத்து குறையாமல் எப்பொழுதும் புத்துணர்ச்சியாக விளங்குவீர்கள்.

பீட்ரூட்,கேரட் போன்ற ஜுஸ் குடிப்பதால் முடி கொட்டுவதை கட்டுபடுத்தி முடி வளர உதவுகிறது.பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் இரத்தத்தை அதிகமாக உற்பத்தி செய்கிறது.இதனுடன் சிறிது பால் சேர்த்து முகத்தில் தேய்த்தால் முகம் பொலிவாகவும்,மென்மையாகவும் மாறும்.

தினமும் காலையில் பூசணிக்காய் மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கின் ஜூஸ் பருக வேண்டும்.இதில் உள்ள வைட்டமின் சி என்ற சத்தால் முகத்தில் பருக்கள் வராமல் தடுக்கின்றது.தக்காளியின் ரகசியம் யாவரும் அறிந்ததே!!தக்காளியில் உள்ள அமிலத்தால் முகம் பொலிவு அடையும்.

இது போன்ற சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை தினமும் ஜூஸ் போட்டு சாப்பிட்டால் உடலில் ஆரோக்கியமும் மற்றும் முகத்தில் பொலிவும் பெறுவீர்கள்.

You'r reading நீண்ட ஆயுளை பெறுவதற்கு தினமும் ஒரு காய்கறி ஜுஸ் Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை