சொந்த நாடு , சிறப்பான அணி - ஆஸ்திரேலியாவை வெற்றிக் கொள்ளுமா இங்கிலாந்து...! இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா

by Loganathan, Sep 11, 2020, 19:22 PM IST

கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வந்துள்ள ஆஸ்திரேலியா அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. சொதாம்ப்டனில் நடந்த மூன்று 20 ஓவர் போட்டிகளில் 2-1 என்று தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி .இந்நிலையில் முதல் ஒரு நாள் போட்டி ஓல்ட் ட்ரஃபார்ட் , மேன்செல்டாரில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்குத் துவங்க உள்ளது.

2019 உலகக்கோப்பை போட்டிக்குப் பின்னர் இரண்டு அணிகளும் சந்திக்கும் முதல் ஒரு நாள் போட்டி இதுவாகும். மேலும் 2023 ல் இந்தியாவில் நடைபெற உள்ள உலககோப்பை போட்டிக்கான தகுதி போட்டிகளாக ஒவ்வொரு அணியும் சொந்த நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட 4 ஒரு நாள் தொடர் மற்றும் 4 வெளிநாடுகளில் 4 ஒரு நாள் தொடர் ஆட வேண்டும். இதில் இங்கிலாந்து 2 தொடர்களை விளையாடிவிட்ட நிலையில் இந்த தொடர் ஆஸ்திரேலியாவுக்கான முதல் தொடர் ஆகும்.

இவ்விரு அணியின் பலம் என்றால் பேட்டிங் தான் . இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் திரும்பியிருப்பது அணிக்கு பலத்தைச் சேர்க்கும். கடந்த உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்ற வீரர்களில் 9 பேர் இங்கிலாந்து அணிக்காக இன்றும் கலம் காண உள்ளனர். மேலும் பென் ஸ்டோக்ஸ் இல்லாதது இங்கிலாந்து அணிக்குச் சற்று பின்னடைவை ஏற்படுத்தும்.

ஆஸ்திரேலியா அணியில் 20 ஓவர் போட்டியில் ஓரங்கட்டப்பட்ட லபுஷன் இன்று கலம் காண அதிக வாய்ப்புள்ளது . ஏனெனில் இவர் கடந்த ஒரு நாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிராகச் சிறப்பாக விளையாடினார். மேலும் இவர் பகுதி நேரப் பந்து வீச்சையும் சிறப்பாக , மேக்ஸ்வெல் உடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது.

பிட்ச்

இங்கிலாந்தில் உள்ள ஓல்ட் ட்ரஃபார்ட், மேன்செஸ்டார் மைதானம் வேகத்திற்குச் சாதகமான ஆடுகளம் . ஆனால் உலகக்கோப்பையைக் கருத்தில் கொண்டு இந்த மைதானம் சுழற் பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாகத் தயார்ப் படுத்தப்பட்டுள்ளது.மேலும் பந்து வீச்சின் வேகம் குறைவாக இருக்கும் என்பதால் இன்று அதிகப்படியான ரன்களை குவிக்க இரு அணியும் முயற்சி செய்யும் இங்கிலாந்து அணியில் உத்தேசமாகக் களம் காண வாய்ப்புள்ளவர்கள் ஜேசன் ராய் , ஜானி பேர்ஸ்ட்டோ , ஜோ வழித்தடம் , இயன் மோர்கன் , சாம் பில்லிங்ஸ் , ஜால் பட்ளர் , மொயின் அலி , கிரிஸ் வோக்ஸ் , ஆதில் ரஷிட் மார்க் வுட் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர்இவர்களில் இன்று அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரர்கள் தொடக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்ட்டோ , குறிப்பிட்ட இடைவெளிக்குப் பின் அணிக்குத் திரும்பியுள்ள ரூட் , பட்ளர் .

பந்து வீச்சில் கிரிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் வுட்

ஆஸ்திரேலியா அணியில் உத்தேசமாக களம் காண வாய்ப்புள்ளவர்கள் டேவிட் வார்னர் , ஆரோன் பின்ச் ,ஸ்டீவன் ஸ்மித் , மேர்னல் லபுஷன் , மிட்செல் மார்ஷ் ,அலெக்ஸ் கேரி , ஆஸ்டன் அகர் , பேட் கம்மின்ஸ் , மிட்செல் ஸ்டார்க் , ஆடம் சாம்பா , ஜோஷ் ஹேசல்வுட்ஆல்ரவுண்டர் ஆன லபுஷன் இந்த ஆட்டத்தில் முக்கிய வீரராகச் செயல்பட வாய்ப்புள்ளது. மேலும் பந்து வீச்சில் சாம்பா மற்றும் அகர் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புள்ளது.சொந்த நாட்டின் பலம் மற்றும் சிறப்பான செயல்பாடுகளில் உள்ள இங்கிலாந்து அணிக்கு வெற்றிக்கான வாய்ப்புள்ளது.ஆஸ்திரேலியா அணியத் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாகச் செயல்படத் தவறினால் இங்கிலாந்து அணி சுலபமாக வெற்றி பெற்றுவிடும்.

READ MORE ABOUT :

More Sports News

அதிகம் படித்தவை