ஹார்மோன் பிரச்சனைகளைத் தீர்க்கும்... சருமத்தை மிளிர வைக்கும் அற்புத பொருள்..!

by SAM ASIR, Sep 15, 2020, 20:57 PM IST

கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளரும் ஒரு மருந்துச் செடி ஆகும். இது லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. மேலும் கிரீஸ், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா,தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இயற்கையான வளர்கின்றது. இந்தியாவில் ஆழ்வார் (ராஜஸ்தான்), சட்நாபள்ளி (ஆந்திரா), ராஜபிப்லா (குஜராத்), சேலம் மற்றும் தூத்துக்குடி (தமிழ்நாடு) ஆகிய நாடுகளில் சாகுபடி செய்யப்படுகின்றது. பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்குக் கற்றாழை பெரிதும் பயன்படுகின்றது.

கற்றாழை வகைகள்

கற்றாழையில் மூன்று வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அவை
1. குர்குவா கற்றாழை - அலோ பார்படென்ஸ் (Aloe vera)
2. கேப் கற்றாழை - அலோ பெராக்ஸ் (Aloe ferox)
3. சாகோட்ரின் கற்றாழை - அலோ பெர்ரி (Aloe perryi)

இந்தியாவில் அலோ பார்படன்சிஸ் (அலோ வீரா) நாடு முழுவதும் காணப்படுகின்றது. இது வறட்சியான சூழ்நிலையில் கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரம் வரை உள்ள மலைப்பிரதேசங்களில் வளர்கின்றது.

மருத்துவ குணம்

கற்றாழையின் மருத்துவ குணத்தை கி.பி. 17 ஆம் நூற்றாண்டிலேயே ஆப்பிரிக்க மக்கள் கண்டறிந்து உலகத்துக்கு அறியப்படுத்தினர்.கற்றாழையின் இலையில் அலோயின் 'அலோசோன் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. அலோயின் வேதிப்பொருளின் அளவு நான்கிலிருந்து இருபத்து ஐந்து சதம் வரை இதன் இலையில் காணப்படுகிறது.

சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது.

கற்றாழை சாறு

கற்றாழை சாற்றினை வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும். ஒரு தம்ளர் தண்ணீரில் 20 மி.லி கற்றாழை சாற்றினை கலந்து குடிக்கலாம். கற்றாழை சாற்றினை அதே அளவு துளசி சாறு அல்லது நெல்லிக்காய் சாறு இவற்றைக் கலந்தும் குடிக்கலாம். 40 அல்லது 60 மி.லி. பாகற்காய் சாற்றினை 20 மி.லி. கற்றாழை சாற்றுடன் ஒரு தம்ளர் நீருடன் கலந்து பருகலாம். கற்றாழை சாற்றுக்கு உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் பண்பு உள்ளது.

செரிமானம்

செரிமான கோளாறு, மலச்சிக்கல், வயிற்றில் அமிலத்தின் காரணமாக ஏற்படும் உபாதைகள்,வாயு தொல்லை இவற்றை போக்குவதற்குத் தினமும் கற்றாழை சாற்றினை அருந்தவேண்டும். கற்றாழை சாறு பசியினை தூண்டும். உடல் எடை அதிகமாவதைத் தடுக்கும்.

நச்சு

கற்றாழை சாற்றுக்கு நம் உடலிலுள்ள நச்சுப்பொருள்களை வெளியேற்றும் ஆற்றல் உள்ளது. அதிகாலையில் இதை அருந்துவதால் செரிமான கோளாறுகள் குணமாவதுடன், குடலும் சுத்தமாகும்.

ஹார்மோன்

கற்றாழை சாறு பல்வேறு மூலிகை டானிக்குகளுடன் சேர்க்கப்படுகிறது. ஹார்மோன் பிரச்சனையைத் தீர்ப்பதற்கும் கணையம் மற்றும் மண்ணீரல் குறைபாடுகளை போக்குவதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது.

சரும ஆரோக்கியம்

கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” அதாவது “கூழ்” சருமத்திற்குப் பாதுகாப்பதாகக் கருதப்படுகிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையைக் காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது. இதனால் வணிக ரீதியாக அதன் “கூழ்” உலகெங்கிலும் சரும லோசன், சவரம் செய்வதற்கான க்ரீம், ஷாம்பூ ஆகியவற்றால் சேர்க்கப்படுகின்றது. சருமத்திற்கு ஈரப்பதம் (moisturising) அளிப்பதற்கும் இது பயன்படுகிறது. கூந்தலின் அடிப்பகுதியில் தலையில்படும்படி இதைத் தேய்க்கலாம்.

READ MORE ABOUT :

More Health News

அதிகம் படித்தவை