புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்கும் வெண்டைக்காய் எப்படி பயன்படுத்துவது? வாங்க பார்க்கலாம்.

benefits of ladys finger

by Logeswari, Oct 12, 2020, 19:32 PM IST

வெண்டைகாயில் புரதம்,இரும்பு சத்து,நார்சத்து என ஏராளமான சத்துக்கள் சொல்லி கொண்டே போகலாம். வெண்டைக்காயில் சுரக்கும் வழு வழுப்பு தன்மை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.புற்றுநோய் முதல் நீரிழிவு நோய்க்கு சிறந்த மருத்துவ குணமாக செயல்பட்டு வருகிறது.வெண்டைகாயை சாப்பிட்டால் மூலைக்கு மிகவும் நல்லது.சிந்தனை சக்தியை அதிகப்படுத்துவதோடு ஞாபக சக்தியையும் வளர்க்கிறது.புற்று நோய் செல்களை வளர்ச்சி பெறாமல் தடுக்க வெண்டைகாயை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.

தயாரிக்கும் முறை:-

முதலில் நான்கு முதல் ஐந்து வெண்டைக்காயை எடுத்து கொண்டு சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் வெட்டிய வெண்டைக்காயை சேர்த்து கொள்ளவும்.

பிறகு அதனை ஒரு மெல்லிய துணியால் ஒரு இரவு முழுவதும் மூடி வைக்கவும்.

தினமும் காலை எழுந்தவுடன் வெண்டைக்காயை ஊறவைத்த தண்ணீரை குடிக்க வேண்டும்.

அவ்வாறு குடித்து வந்தால் புற்று நோய்க்கு மிகவும் நல்லது.இந்த தண்ணீரில் ஊட்டசத்து அதிகம் உள்ளதால் சுறு சுற்றுப்பாக இருக்க உதவுகிறது.

புற்று நோயின் செல்கள் மேலும் வளர்ச்சி அடையாமல் முற்றிலும் தடுக்கிறது.மற்றும் உடம்பில் சர்க்கரையின் அளவையும் சீர் செய்கிறது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Health News

அதிகம் படித்தவை