96 திரைப்படத்தில் யமுனை ஆற்றிலே பாடலை பாட மறுத்த நடிகை, போட்டோ ஷூட் மட்டும் எடுப்பாராம்!! வைரலாகும் புகைப்படங்கள்.

by Logeswari, Oct 12, 2020, 19:21 PM IST

90s வாழ்ந்தவர்கள் மற்றும் பள்ளி பருவத்தின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டவை தான் 96 திரைப்படம். இத்திரைப்படத்தை சி.பிரேம் குமார் இயக்கிவுள்ளார்.

இதில் திரிஷாவின் பள்ளி பருவ காலத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் தான் கெளரி கிஷணின். இவரது கியுட்டான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இந்த படத்தில் நடித்ததிற்காக பல விருதுகளை வாங்கி குவித்தார். முதல் திரைப்படத்திலே வெற்றியின் ருசியை கண்டவர். இவரது பெயர் கெளரி கிஷணின் என்று சொன்னால் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. யமுனை ஆற்றிலே ஜானு என்று சொன்னால் தான் தெரிய வாய்ப்பு உள்ளது.இவருக்கு ரசிகர்கள் கூட்டம் பல பிரிவுகளாக பிரிந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

திரையுலகில் நடிகைக்களுக்கான போட்டிகள் நாளுக்கு நாள் அதிமாகி கொண்டு இருக்கிறது. இதனால் பலரும் பல விதமான கதாபாத்திரத்தில் போட்டோ ஷூட் எடுத்து வருகின்றனர்.அந்த வரிசையில் கெளரியும் அடிவைத்து உள்ளார். கடற்கரையில் உள்ள பாறைக்கு இடையில் போட்டோ ஷூட் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்று உள்ளது.

இவர் தளபதி விஜயின் 64வது திரைப்படமான மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Get your business listed on our directory >> - https://directory.thesubeditor.com


READ MORE ABOUT :

More Cinema News