இயற்கையின் தாதுக்களில் மருத்துவ குணங்கள் அதிகமாக நிறைந்துள்ளது. அந்த காலத்தில் இயற்கையை நம்பி தான் நம் முன்னோர்கள் மருத்துவம் செய்து பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றினார்கள். இதை தான் பாரம்பரிய வைத்தியம், பாட்டி வைத்தியம் என்று அழைத்து வருகின்றோம். அப்பொழுது கிடைத்த மருந்துக்கு நிகர் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட இயற்கையின் வரப்பிரசாதமான ஒன்று தான் மணத்தக்காளி. இந்த செடி எளிதில் கிடைக்க கூடிய ஒன்றாகும். இதில் சூப்பு செய்து குடித்தால் மார்பில் கட்டிய சளி, காய்ச்சல் ஆகியவற்றைக்கு பாட்டி மருத்துவம் எனக் கூறலாம்..
தேவையான பொருள்கள்:-
மணத்தக்காளி கீரை - 1/4 கப்
பூண்டு - 5 பல்
சீரகம் - 1/2 ஸ்பூன்
மிளகு - 1/4 ஸ்பூன்
வெங்காயம் - சிறிதளவு
உப்பு - உப்பு
தக்காளி - 1
தண்ணீர் -2 கப்
கொத்தமல்லி -சிறிதளவு
செய்முறை:-
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் தேவையான எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடான பிறகு அதலில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, சீரகம், பூண்டு, மிளகு ஆகியவை சேர்த்து நன்றாக வறுக்கவும். பின்னர் 1/4 கப் மணத்தக்காளி கீரையை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
வதக்கிய கீரையில் 2 கப் தண்ணீர் ஊற்றி தேவையான உப்பு சேர்த்து 15 - 20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்த பிறகு இறக்கும் பொழுது சிறிதளவு கொத்தமல்லி தழையை தூவி குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.