மழை நேரங்களில் பைக்குக்கு சைடு ஸ்டாண்ட் வேண்டாம். ஏன்? டிப்ஸ்!

by Balaji, Nov 18, 2020, 16:32 PM IST

நோ சைடு ஸ்டாண்ட்!

* மழை நேரங்களில் வாகனங்களைக் குறிப்பாக பைக்குகளை பார்க் பண்ணும்போது, சைடு ஸ்டாண்ட் போடுவது கூடாது. சைடு ஸ்டாண்ட் போடுவது ஈஸியான விஷயம்தான்
ஆனால், இது பைக்குக்கு ஆகாத விஷயம். சைடு ஸ்டாண்ட் போட்டு பைக்குகளை பார்க் பண்ணும்போது, ஹேண்ட் பார் கேபிள் வழியாகத் தண்ணீர் பயணம் செய்து, கார்புரேட்டரில் மழை நீர் சேகரிக்கப்படும். திடீரென பைக் ஸ்டார்ட் ஆகாமல் போவதற்கு இதுதான் முக்கியக் காரணம். மேலும், சைடு ஸ்டாண்ட் போடும்போது பேட்டரிக்குள்ளும் வேதியல் மாறுதல்கள் நடந்து, பேட்டரியின் ஆயுளும் குறையும். எனவே சிரமத்தைப் பார்க்காமல் சென்டர் ஸ்டாண்ட் போடுவது நல்லது .

ஹெல்மெட் வைஸரை இறக்குங்க!

* மழையில் பைக் ஓட்டும்போது, பார்வை ரொம்ப முக்கியம். ஹெல்மெட் போட்டு தலை நனையாமல் பாதுகாப்பதெல்லாம் சரிதான். அதேநேரத்தில், ஹெல்மெட்டின் வைஸரைத் ஏற்றிவிட்டுப் பயணியுங்கள். ஏனென்றால், வைஸர் வழியாகத் தண்ணீர் திட்டுத் திட்டாக இறங்கி, உங்களுக்கு ரோடு தெரிவதில் சிக்கல் ஏற்படும். அதேபோல், கண்ணாடி அணிவதையும் தவிர்க்க வேண்டும். ஹாயாக மழை நீரை முகத்தில் வாங்கியபடி பயணிப்பதில் தப்பொன்றுமில்லை.

டேங்க் கவர் முக்கியம் !

* சில பைக்குகளில் பெட்ரோல் டேங்க் மூடிகள் ஃப்ளிப் டைப், ஹாப்-அப் டைப் என்று வெரைட்டியாக இருக்கும். இந்த மூடிகளை எல்லா நேரங்களிலும் நம்ப முடியாது. மழை நேரங்களில் பெட்ரோல் டேங்க் வழியாகவும் தண்ணீர் இறங்கும் அபாயம் இருக்கிறது. நடுரோட்டில் ஒருவர் பைக் ஸ்டார்ட் ஆகாமல் திணறிக்கொண்டிருக்க, என்னவென்று பார்த்தால் பெட்ரோல் டேங்கில் தண்ணீர்! மறுபடியும் டேங்கில் உள்ள எல்லா பெட்ரோலையும் டிரெயின் செய்துவிட்டுத்தான் பயணம் தொடர வேண்டும். எனவே, பைக்கின் டேங்குக்கு கவர் ரொம்ப அவசியம்.

மாங்கு மாங்குனு கிக்கரை மிதிக்காதீர்கள்!

அதையும் தாண்டி பள்ளத்தில் பைக் கவிழ்ந்து இன்ஜின் ஆஃப் ஆகும் பட்சத்தில், உடனே பைக்கை ஸ்டார்ட் பண்ணிவிட கூடாது.. பக்கவாட்டில் கவிழ்ந்தால் ஏர்-லாக் ஆக வாய்ப்புண்டு. எனவே, உடனே பைக் கிக்கரை மிதித்து அல்லது செல்ஃப் ஸ்டார்ட்டைப் படுத்தி எடுக்காதீர்கள். . ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் பொறுமை அவசியம் வேக்யூம் லாக் ஆகியிருப்பதால், பைக்குக்குக் கொஞ்சம் ரெஸ்ட் தேவை. எனவே இரண்டு மூன்று நிமிடம் கழித்து முயற்சித்தால் பைக் ஸ்டார்ட் ஆகும்.

சைலன்ஸர் மூழ்குகிறதா?

* இப்போது வரும் பைக்குகளில் சைலன்ஸர் ஏற்றமாக இருப்பதால் பிரச்சனை இல்லை. அதையும் மீறி சைலன்ஸர் மூழ்கும் அளவு நீரில் பயணிக்க வேண்டிய பட்சத்தில், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதாவது, தொந்தரவுகள் இல்லை என்று உறுதிசெய்து கொண்டபிறகு, முதல் அல்லது இரண்டாவது கியரிலேயே செல்லலாம். ஆக்ஸிலரேட்டரை முறுக்க மறந்த ஒரு விநாடியில் சைலன்ஸருக்குள் தண்ணீர் புகும் அபாயம் உண்டு. எனவே, ஆக்ஸிலரேஷனில் கவனமாக இருக்க வேண்டும்.

ஸ்பார்க் பிளக்

* ஒரு பைக்கின் ஸ்டார்ட்டிங் ட்ரபுளுக்கு உற்ற நண்பனும், சிம்ம சொப்பனமும் ஸ்பார்க் பிளக்தான். குளிர் நேரங்களில் பைக் ஓடும்போது, குளிரும் வெப்பமும் சேர்ந்து ஸ்பார்க் பிளக்கின் தன்மைக்கு எதிராக மோதிப் பார்க்கும். சில பிளக்குகளைக் கழற்றிப் பார்த்தால், பாயின்டுகள் தேய்ந்திருக்கும். இந்த நேரங்களில் பைக் நிச்சயம் ஸ்டார்ட் ஆகாது. எனவே, எக்ஸ்ட்ரா ஸ்பார்க் பிளக் கைவசம் வைத்திருப்பது, சிக்கலான நேரத்தில் கைகொடுக்கும். ஒரு ஸ்பார்க் பிளக்கின் விலை 100 முதல் 150 ரூபாய் வரை தான் இருக்கும்.

நல்ல டயர் நல்லது!

* சிலர் பைக்குகளின் டயரைத் தேய்ந்து போகும் அளவு ஓட்டுவார்கள். டியூபைக் கழற்றினால், ஏகப்பட்ட பஞ்சர்கள் ஒட்டப்பட்டிருக்கும். மழை நேரம் வருகிறது என்று தெரிந்ததும், உங்கள் டயரைச் சோதனை இடுங்கள். சிலருக்கு ஈரத் தரையில் ஸ்லிப் ஆகும், பள்ளங்களில் கிரிப் கிடைக்காது. இதற்கு காரணம் டயர்களின் பட்டன்கள் தேய்ந்திருக்கும். எனவே, மழை நேரத்தில் புது டயரை மாற்றி ஓட்டிப் பாருங்கள். அத்தனை சிறப்பாக இருக்கும்.

லோ பேட்டரி..?

* இப்போது வரும் பைக்குகளில் பேட்டரியில் சார்ஜ் இல்லையென்றால், ஸ்டார்ட் ஆகாது; ஹார்ன் அடிக்காது; கரன்ட் வராது. சிலர் லோ பேட்டரி வார்னிங் வந்தபிறகும், செல்ஃப் ஸ்டார்ட் பண்ணுவார்கள்; ஹார்ன் அடிப்பார்கள்; இது பெரிய சிக்கலில் கொண்டு போய்விடும். திடீரென முழு சார்ஜும் இறங்கி விடும் பட்சத்தில்... மெக்கானிக்கே கைவிரித்து விடுவார். வேறு வழியே இல்லை; புது பேட்டரி மாற்றினால்தான் பைக்கை ஸ்டார்ட் பண்ணவே முடியும்.

ரொம்ப முக்கியம் - மழைக் காலம் முடிந்ததும் இப்போதானே ஆயில் மாத்தினோம்; அதுக்குள்ள எதுக்கு? என்று யோசனை பண்ணாமல் செலவை பார்க்காமல், பைக்கை ஒரு தடவை ஆயில் சர்வீஸ் செய்வது அவசியம்.

You'r reading மழை நேரங்களில் பைக்குக்கு சைடு ஸ்டாண்ட் வேண்டாம். ஏன்? டிப்ஸ்! Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை