கருத்தரிக்க வேண்டுமா? இவற்றை சாப்பிட்டால் பலன் கிடைக்கும்

'குழந்தை செல்வம்' அனைவரும் விரும்புவது ஆகும். கருத்தரிப்பதற்குப் பல காரணிகள் துணையாக இருப்பினும், உணவு அதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பலர் அறிந்திராத ஒன்று. குழந்தை வேண்டும் என்று எண்ணுபவர்கள் உணவில் மாற்றத்தை கொண்டு வந்தால் நிச்சயம் வீட்டில் 'குவா குவா' சத்தம் கேட்கும். ஆண், பெண் இருவருமே அதிக புரதம் (புரோட்டீன்), மற்றும் குறைந்த கொழுப்பு, கார்போஹைடிரேட் உணவுகளை சாப்பிடவேண்டும். இது கருத்தரிக்க விரும்புவோர் கவனத்தில் கொள்ளவேண்டிய பொதுவான நடைமுறையாகும்.

தாவர புரதம்

புரதம் அதிகம் சாப்பிடவேண்டும் என்றதும் நம் நினைவுக்கு இறைச்சியே நினைவுக்கு வரும். இறைச்சியில் புரதம் உள்ளது உண்மைதான். ஆனால் கருத்தரிக்க விரும்புவோர், இறைச்சியைக் காட்டிலும் புரதம் அதிகமுள்ள தாவர உணவுகளை உண்பது நலம். பீன்ஸ் வகை காய்கறிகள், பருப்பு வகைகளை அதிகம் சாப்பிடுவது பலன் தரும்.

சூரியகாந்தி விதை

விந்தணு எண்ணிக்கை, வேகம் ஆகியவற்றை அதிகரிக்கும் ஊட்டச்சத்துகள் சூரியகாந்தி விதைகளில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கருத்தரிக்க விரும்பும் பெண்களுக்கும் இது ஏற்ற உணவாகும். சூரியகாந்தி விதைகளை சாலட்டுகள், மில்க் ஷேக்குளிலும் சாதாரணமாகவும் சாப்பிடலாம்.

சிப்பிகள்

கருத்தரிப்பை ஊக்குவிப்பதில் சிப்பிகள் முக்கிய இடம் வகிக்கின்றன. ஃபோலேட், வைட்டமின் பி12, துத்தநாகம் (ஸிங்க்), செலினியம் மற்றும் இரும்பு சத்து இவற்றுடன் இனவிருத்திக்கு உதவும் வைட்டமின்கள் சிப்பிகளில் அதிகம் காணப்படுகின்றன.

இலவங்கபட்டை

பிசிஓஎஸ் என்னும் சினைப்பை நீர்க்கட்டிகள், கருத்தரிப்பைத் தடுக்கக்கூடியவை. ஒரு தேக்கரண்டி அளவு இலவங்கப்பட்டை பொடி சாப்பிடுவது, மாதவிடாயைச் சீராக்கும். கருத்தரிப்பை ஊக்குவிக்கும். சர்க்கரைக்குப் பதிலாக இந்தப் பொடியைப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

அடர் பால் உணவுகள்

பால் சார்ந்த உணவுபொருள்களான கிரீம், யோகர்ட், பாலடைக்கட்டி (சீஸ்), வெண்ணெய் போன்றவை நிறைவான கொழுப்பு கொண்டவை. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது.

வைட்டமின் துணை உணவுகள்

வைட்டமின்கள் மற்றும் தாது உப்பு குறைபாடு கருத்தரிப்பைத் தடுக்கக்கூடும். ஆகவே, நல்ல சாப்பாடு உண்பதுடன், ஃபோலேட், வைட்டமின் பி12 போன்ற துணை உணவுகளை சாப்பிடுவதும் கருத்தரிக்கும் நோக்கத்தை அடைய உதவும். மருத்துவரின் ஆலோசனையின்படி இவற்றை உண்ணலாம்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?

READ MORE ABOUT :