என் தவறுகள், முன்னாடி பேச தைரியமில்லாதவர்கள்.. கவர்ச்சி நடிகை ஷகீலா பகிரங்க பேச்சு..

by Chandru, Dec 19, 2020, 10:25 AM IST

90களில் மலையாள ஹீரோக்களை தனது கவர்ச்சி அலையால் கதறடித்தவர் நடிகை ஷகீலா. இவரது படங்கள் வெளியாகும் நாளில் பெரிய ஹீரோக்களே தங்களது படத்தை வெளியிடத் தயங்கினர். கவர்ச்சி நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு அவரது பெயரிலேயே திரைக் கதையாக உருவாகி உள்ளது. ஷகீலா தனது வாழ்க்கையைப் புத்தகமாக எழுதி வெளியிட்டார். அதைத் தழுவி இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் ஷகீலா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா நடிக்கிறார்.

மேலும் பங்கஜ் திரிபாதி, எஸ்தர் நொரான்கா, ராஜீவ் பிள்ளை, ஷீவா ரானா, கஜோல் சக் மற்றும் சந்தீப் மலானி நடித்துள்ளார்கள்.ஷம்மி நன்வானி, சரவண பிரசாத் இப்படத்தைத் தயாரித்துள்ளார்கள். பிரகாஷ் பழனி இப்படத்தை வழங்குகிறார். இந்திரஜித் லங்கேஷ் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ஷகீலா கலந்துகொண்டு பேசினார்.

அவர் கூறியதாவது:நான் எழுதிய எனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சிலவற்றைப் படத்துக்காக மாற்றி இருக்கிறார்கள். என் வாழ்கையில் நடந்ததை ஒளிவு மறைவு இல்லாமல் எழுதி உள்ளேன். இதில் எனக்கு என்ன பெருமை என்றால் நான் உயிரோடு இருக்கும்போதே எனது வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வெளியாகிறது என்பதுதான். இந்த படத்தில் ராஜீவ் பிள்ளை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். என் வாழ்க்கையிலும் அந்த பாத்திரம் முக்கியமானது. என்னைப்பற்றி பலர் பலவிதமாகப் பேசுகிறார்கள். நான் வாழ்க்கையில் சில தவறுகள் செய்தேன் அந்த தவறை மற்ற பெண்கள் செய்து ஏமாந்துவிடக் கூடாது என்பதைத்தான் எனது புத்தகம் வெளிப்படுத்தும் கருத்தாகச் சொல்லப்பட்டது எனக்கு வலி ரணம் எவ்வளவு இருந்திருக்கும் என்கிறார்கள். எனக்குப் பின்னால் பேசுபவர்களைப் பற்றி நான் கவலைப்பட்ட தில்லை எனக்கு முன்னால் பேச யாருக்கும் தைரியம் இருந்ததில்லை.இவ்வாறு ஷகீலா பேசினார்.

இதில் நடிகர் தம்பி ராமையா பேசும்போது,ஷகீலா வாழ்க்கை படமாகும் அளவுக்கு அவர் வளர்ந்திருக்கிறார். இதற்குப் பின்னால் அவரது வேதனைகளும் வலியும் ரணமும் எவ்வளவு இருந்திருக்கும் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். சில்க் ஸ்மிதா வாழ்க்கை படம் அவர் இறந்து பிறகு உருவானது. ஆனால் உயிரோடு இருக்கும் போதே ஷகீலா வாழ்க்கை உருவாகி இருப்பது அவருக்கு மகிழ்ச்சியைத் தரும். மாஸ்டர் படம் வெளியானால் தான் தியேட்டருக்கு ரசிகர்கள் கூட்டம் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு மும்பே ஷகீலா படம் வெளியாகி தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

இயக்குனர் பிரவின்காந்தி பேசும்போது,ஷகீலா படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் எனது நண்பர். இப்படத் தை நல்ல முறையில் எடுத்து அதைப் பெண்களுக்கு ஒரு நல்ல படிப்பினையாகத் தருவார்கள் என்பதால் அவர்களுக்கு எனது வணக்கம். மலையாள திரையுலகிலிருந்து ஷகீலா வை கடப்பாரை, மம்மூட்டி எல்லாம் முயற்சி செய்தார்கள். ஷகீலாவை மந்திரவாதிகளும் முயன்றார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றார்.ஷகீலா படம் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் 2020 கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்