டயாபடீஸ் பாதிப்பா? குளிர்கால பாதுகாப்பு ஆலோசனைகள்

Advertisement

டயாபடீஸ் என்னும் நீரிழிவு பாதிப்பு உள்ளோர் நன்றாக உடற்பயிற்சி செய்யவேண்டும். ஆனால் குளிர்காலத்தில் பெரும்பாலும் உடற்பயிற்சிகளை செய்யவோ, நடைபயிற்சி செல்லவோ இயலாத சூழல் நிலவும். போதுமான உடல் செயல்பாடு இல்லாதததால் இயற்கையாகவே உடல் அட்ரீனலின் மற்றும் கொரிஸ்டால் போன்ற ஹார்மோன்களை அதிகமாக சுரக்கிறது. உடலுக்கு ஆற்றலை அளிக்கும்வண்ணம் ஈரல் அதிகமான குளூக்கோஸை வெளியிடுகிறது. இதன் காரணமாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயருகிறது. தற்போது இந்தியாவில் 5 கோடி பேர் நீரிழிவு பாதிப்பினால் அவதிப்படுகின்றனர். 2025ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 6 கோடியாக உயரும் என்று கணிக்கப்படுகிறது. வாழ்வியல் முறையை மாற்றுவதன் காரணமாக நீரிழிவு பாதிப்பை தவிர்க்க இயலும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

உணவுமுறை
நீரிழிவை கட்டுக்குள் வைப்பதற்கு மிக முக்கியமானது உணவு ஆகும். அதிக அளவு காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், ஓட்மீல் ஆகியவற்றை சாப்பிடவேண்டும். இனிப்புகள் மற்றும் கொழுப்பு உணவுகள் தவிர்க்கப்படவேண்டும். உலர் பழங்களில் ஃப்ரக்டோஸ் என்ற வகை இனிப்பு இருக்கும். ஃப்ரக்டோஸ், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். ஆகவே, நீரிழிவு பாதிப்புள்ளோர் உலர் பழங்களை (dry fruits) சாப்பிடக்கூடாது.

நீர்ச்சத்து அதிகப்படியான குளூக்கோஸ் உடலிலிருந்து சிறுநீர் மூலம் வெளியேற வேண்டும். அதற்கு உடலில் அதிகப்படியான நீர்ச்சத்து அவசியம். மற்ற வகை பானங்கள் சர்க்கரை கலந்தவையாக, பதப்படுத்தப்பட்டவையாக இருக்கக்கூடும். ஆகவே அவற்றை அருந்துவதை தவிர்த்து நீரை அதிக அளவில் பருகவேண்டும்.

போதுமான உறக்கம்
ஆழ்ந்து உறங்குவது உடலிலிருக்கும் பாதிப்புகளை ஆற்றுவதற்கு உதவும். உறங்குவதால் உடலிலிருக்கும் நச்சுப்பொருள்கள் அகற்றப்படும். நீரிழிவு பாதிப்புள்ளோர் தினமும் 6 முதல் 7 மணி நேரம் ஆழ்ந்து உறங்குவது அவசியம். இதன் காரணமாக உடல் செல்களில் ஏற்படும் சேதம் குணப்படுத்தப்பட்டு, நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.

மனநலம்
பொதுவாக நீரிழிவு பாதிப்புள்ளோர் மன அழுத்தமுடையவர்களாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குளிர்காலத்தில் மன நலம் இன்னும் பாதிப்புக்குள்ளாகலாம். மனக்கலக்கம், மனப்பாங்கில் மாற்றம், குழப்பம், மனச்சோர்வு இவை உண்டாகக்கூடும். இவற்றை தவிர்க்க மனதுக்கு பிடித்த உறவினர், நண்பர்களோடு நேரம் செலவழிக்கவேண்டும். மனதுக்குப் பிடித்த பொழுதுபோக்கில் ஈடுபடலாம். இவற்றின் மூலம் மன நலம் பாதுகாக்கப்படும்.

உடல் பருமன்
நீரிழிவு பாதிப்பு ஏற்படுவதற்கு 80 முதல் 85 சதவீதம் காரணமாக அமைவது உடல் பருமனாகும். உடல் பருமன் காரணமாக வகை 2 என்ற இன்சுலின் போதாமையால் ஏற்படும் பாதிப்பு உருவாகிறது. உடல் பருமனாகும்போது கணையத்தினால் போதுமான அளவு இன்சுலினை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க உடல் எடை அதிகமாகாமல் கவனமாக இருக்கவேண்டும். உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை தவறாமல் பின்பற்றவேண்டும்.

நோய் எதிர்ப்பு ஆற்றல்
நீரிழிவு பாதிப்புள்ளோர் அதிக கொழுப்புள்ள உணவுகள், மது, காஃபி மற்றும் காஃபைன் அடங்கிய பண்டங்கள், வெள்ளை சர்க்கரை ஆகியவற்றை தவிர்க்கவேண்டும். இவை அனைத்துமே உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை மட்டுப்படுத்தக்கூடியவை.

வெளிப்புறம் தரும் ஆரோக்கியம்
குளிர்காலத்தில் வெயில் உடலில்படுமாறு வீட்டுக்கு வெளியே நேரம் செலவழிப்பது அவசியம். வைட்டமின் டி உடலுக்குத் தேவையான சத்தாகும். சூரிய ஒளி உடலில் படுவதால் வைட்டமின் டி உடலுக்குக் கிடைக்கும்.

சரிவிகித உணவு, உடல் செயல்பாடு, உடல் எடையை சீராக பராமரித்தல் ஆகியவை நீரிழிவை கட்டுக்குள் வைக்கும் முக்கியமான காரணிகளாகும். குளிர்காலத்தில் இவற்றை சரியாக கடைபிடிப்பதால் தொல்லைகளை தவிர்த்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று உடல்நல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?

READ MORE ABOUT :

/body>