குளிர்காலத்தில் மூட்டுவலியை சமாளிப்பது எப்படி?

by SAM ASIR, Jan 5, 2021, 20:57 PM IST

மூட்டுவலி எல்லா காலநிலையிலும் தொந்தரவு தரக்கூடியது. ஆனால், குளிர்காலத்தில் மூட்டுவலி தீவிரமாகக்கூடும். முடக்குவாதம், காயம், கடின உடற்பயிற்சி இவற்றால் மூட்டுவலி ஏற்பட்டாலும் குளிர் அதன் தாக்கத்தை அதிகப்படுத்தும். மூட்டுகளில் வலி, விறைப்புத்தன்மை, வீக்கம் ஆகியவை அன்றாட செயல்பாடுகளுக்கு இடையூறு செய்யக்கூடும்.

குளிரும் மூட்டுவலியும்
மூட்டுவலிக்கு எப்படி ஒரு குறிப்பிட்ட காரணம் இல்லையோ அதுபோலவே குளிர்காலத்தில் அது தீவிரமாவதற்கும் குறிப்பிட்ட காரணம் இல்லை. வெளிப்புற காற்றின் அழுத்தம், காற்றின் ஈரப்பதம், வெப்பநிலை ஆகியவை மூட்டுவலியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்று கருதப்படுகிறது. வெப்பநிலை மாற்றத்திற்கும் மூட்டுவலிக்கும் உள்ள தொடர்பை பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மூட்டுகளிலுள்ள சவ்வுகளில் ஏற்படும் பாதிப்பு, திசுக்களில் ஏற்படும் தேய்மானம் ஆகியவற்றால், அப்பகுதியிலுள்ள நரம்புகள் காற்றின் அழுத்தத்தை உணர நேரிடுகின்றன. இதன் காரணமாக வலி உண்டாகிறது. குளிர்காலத்தில் நம் உடல் வெப்பத்தை தக்க வைக்கிறது. வெப்பத்தை தக்க வைப்பதற்காக ஒவ்வொரு உறுப்புக்கும் அதிக அளவில் இரத்தம் செல்லுகிறது. இரத்த ஓட்டம் விரைவாவதால் புயங்கள், கால்கள், தோள்பட்டை, மூட்டுகள் இவற்றிலுள்ள இரத்த நாளங்கள் ஆகியவை விறைத்துக்கொள்ளுவதால் வலியும் அசௌகரியமும் உண்டாகின்றன.

மூட்டுவலியை எப்படி தவிர்க்கலாம்?
ஏற்கனவே மறைவாக இருக்கக்கூடிய உடல்நல கோளாறுகளை தீவிரமாக்கும் தன்மை குளிருக்கு உண்டு. சில ஆரோக்கியமான பழக்கவழக்கங்களையும் வீட்டு வைத்தியத்தையும் கைக்கொண்டு மூட்டுவலியை தவிர்க்கலாம். அதிகமாக குளிரினுள் செல்லுதல் மூட்டுவலியை மட்டுமல்ல, மற்ற ஆரோக்கிய கேடுகளையும் உண்டாக்கும். ஆகவே, குளிரை தாங்குவதற்கு உரிய ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். உகந்த பல மடிப்புகள் கொண்ட ஆடைகளை அணியாமல் குளிரில் வெளியே செல்லவேண்டாம். பாரபின் மெழுகினை மூட்டுகளில் தடவுவது மூட்டுவலியின் தீவிரத்தை குறைக்கும். ஹீட்டிங் பேடு (heating pad) பயன்படுத்துவதும் தசைகளில் உள்ள வலியிலிருந்து நிவாரணம் தரும். உடல் சூட்டை கிரகிப்பதன் மூலம் சருமம் இறுகி அதன் மூலம் வலிக்கும் மூட்டுகளுக்கு இதம் கிடைக்கும்.

You'r reading குளிர்காலத்தில் மூட்டுவலியை சமாளிப்பது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை