பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை!

by Loganathan, Jan 5, 2021, 20:48 PM IST

மத்திய அரசின் பழங்குடியினர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னிச்சை அமைப்பான பழங்குடியினர் மாணவர்களுக்கான தேசிய கல்வி அமைப்பில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்வி சங்கத்திலிருந்து (NESTS) காலியாக உள்ள Assistant Commissioner (Administrative), Assistant Commissioner (Finance), Officer Superintendent (Finance), Stenographer Grade – I, Stenographer Grade – II, Office Assistant, Multi - Tasking Staff (MTS) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 04.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 8

துணை ஆணையர் (நிர்வாகம்) - 2
துணை ஆணையர் (நிதி) - 1
அலுவலக கண்காணிப்பாளர் (நிதி) - 2
சுருக்கெழுத்தர்- I - 1
சுருக்கெழுத்தர்- II - 2
அலுவலக உதவியாளர்- 4
பண்முனை அலுவலர் (MTS) - 6

விண்ணப்ப கட்டணம்:
துணை ஆணையர் பணிக்கு ரூ.1200, கண்காணிப்பாளர், சுருக்கெழுத்தர், அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ.750 மற்றும் பண்முனை உதவியாளர் பணிக்கு ரூ.100 விண்ணப்ப கட்டணம் அளிக்க வேண்டும்.

இணையவழி தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 04.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/01/202101051238086478770ApprovedAdvertisement-V4.pdf

More Employment News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை