புதினா இலையில் வைட்டமின் பி சத்தும், இரும்புச் சத்தும் நிறைவாக உள்ளது. சாதத்தில் புதினா ரசம் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். இப்போது இந்த புதினாவை வைத்து சுலபமான முறையில் புதினா ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
புதினா - 2 கப்
துவரம் பருப்பு - 5 ஸ்பூன்
தக்காளி - 2
கடுகு - அரை ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
வர மிளகாய் - 4
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையானஅளவு
உப்பு - தேவையானஅளவு
செய்முறை :
புதினா ரசம் செய்வதற்கு முதலில் புதினா இலையை நன்கு கழுவி பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அடுத்து துவரம் பருப்பை வேகவைத்து, அதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, கொத்தமல்லி, சீரகம், வர மிளகாய் ஆகியவற்றை போட்டு வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து, அதில் மசித்து வைத்துள்ள துவரம் பருப்பு, தக்காளி கலவையை ஊற்றி, அதனுடன் அரைத்து வைத்துள் பொடி மற்றும் புளிகரைசலை ஊற்றவும்.
பின்பு அதனுடன் நறுக்கி வைத்துள்ள புதினா இலை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கினால் மணமணக்கும் புதினா ரசம் ரெடி.