சர்க்கரை நோயிலிருந்து மட்டுமல்ல கண் நோய்களிலிருந்தும் பாதுகாக்கும் எது தெரியுமா?

by SAM ASIR, Jan 8, 2021, 16:43 PM IST

நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அதிகமான காய்கறிகளை உண்ணுவது அவசியம். அதிலும் நீரிழிவு என்னும் சர்க்கரை பாதிப்புள்ளோர் கண்டிப்பாகக் காய்கறிகளைச் சாப்பிடவேண்டும். காய்கறிகளில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளன. அவற்றால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராகப் பராமரிக்கப்படுகிறது. பொதுவாகக் காய்கறிகள் ஆரோக்கியத்தை அளிப்பவையாயினும் இரத்தத்தில் சர்க்கரை அதிகம் உள்ளோருக்கு பிரெக்கொலி நல்ல பயன் தருகிறது.

டைப் 2 நீரிழிவும் பிரெக்கொலியும்

சயன்ஸ் டிரான்ஸ்லேஷனல் மெடிசின் என்ற ஆய்விதழ், சர்க்கரை நோயுள்ளவர்கள் பிரெக்கொலி அதிகம் சாப்பிடவேண்டும் என்று கூறுகிறது. ஸ்வீடனிலுள்ள லுண்ட் பல்கலைக்கழகத்தின் மருத்து ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டுபிடித்துள்ளனர். இன்சுலின் போதாமையால் ஏற்படும் நீரிழிவு வகை 2 என்று கூறப்படுகிறது. பிரக்கொலியில் உள்ள சல்ஃபோரபேன் என்ற ஆன்ட்டிஆக்ஸிடெண்ட் நீரிழிவுக்கு எதிராகச் செயல்படுகிறது.

ஈரலில் குளூக்கோஸ் உற்பத்தியை சல்ஃபோரபேன் குறைக்கிறது. இதன் காரணமாக வெறும் வயிற்றில் எடுக்கப்படும் இரத்த சர்க்கரையின் அளவு குறைகிறது. வகை 2 நீரிழிவால் பாதிக்கப்பட்டிருந்த 97 நபர்களுக்கு 12 வாரங்கள் பிரெக்கொலி சாறு கொடுத்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சாப்பிடுவதற்கு முன்பு எடுக்கக்கூடிய சர்க்கரையின் அளவை இது பெருமளவு குறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பிரெக்கொலியில் உள்ள சத்துகள்

பிரெக்கொலியில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கே, இரும்பு சத்து, புரதம், பொட்டாசியம் ஆகியவை உள்ளன. நீரிழிவு பாதிப்புள்ளோருக்கும் உடல் எடை குறையவேண்டும் என்று விரும்புவோருக்கும் பிரெக்கொலி மிகவும் ஏற்றதாகும். லூட்டின் மற்றும் ஸீசாந்தின் ஆகிய ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகளும் பிரெக்கொலியில் உள்ளன. இவை கண் நோய்களிலிருந்து நம்மை காக்கக்கூடியவையாகும்.

ஏனைய காய்கறிகள்

நீரிழிவு பாதிப்புள்ளோர் காய்கறிகளை தாராளமாகச் சாப்பிடலாம். அவை எரிசக்தி (கலோரி) குறைவாகக் கொண்டவை. நார்ச்சத்து மிக்கவை. ஆரோக்கியமான ஊட்டச்சத்து கொண்டவை. காலிஃபிளவர், குடமிளகாய் (காப்சிகம்), காரட், பசலைக்கீரை, காளான், பீன்ஸ் ஆகிய காய்கறிகளையும் பிரெக்கொலியையும் நீரிழிவு பாதிப்புள்ளோர் சாப்பிடலாம்.

More Health News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை