ஐ லவ் யூ சொல்லி ஹீரோவை உசுபேத்திய ஹீரோயின்..

உசுப்பேத்தும்போது உம்முனு இருக்கணும்னு நடிகர் விஜய் ஒரு முறை விழா ஒன்றில் பேசும்போது கூறினார். அந்த பாலிசியை அறிமுக நாளிலிருந்தே செய்து வருகிறார் நடிகர் மாதவன். அலை பாயுதே படத்தில் ஷாலினியிடம் தனது காதலை வெளிப்படுத்தும் வசனம் மூலம் இளம் பெண்களின் மனதைக் கொள்ளையடித்தார். அன்று முதல் மாதவனுக்குப் பல இளம் பெண்கள் ஐ லவ் யூ சொல்லத் தொடங்கிவிட்டார்கள். லட்சக்கணக்கான ஐ லவ் யூக்களை கேட்டும் உம்முனு ஒரு சிரிப்பை மட்டும் சிந்திவிட்டுச் சென்றுவிடுவார். நரை தோற்றத்துடன் தற்போது தி நம்பி எபெக்ட் படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு பக்கமென்றால் இன்னமும் காதல் நாயகனாக மறுபக்கம் நடித்துக்கொண்டிருக்கிறார்.

காதல் நாயகனாக மாதவன் நடித்துள்ள மாறா படம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் ஷர்தாஸ்ரீநாத் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த படத்தைப் பார்த்து விட்டுத் தான் மாதவனுக்கு ஐ லவ் யூ சொல்லி இருக்கிறார் ஒரு நடிகை. மான்ஸ்டர் படத்தில் நடித்தவர் பிரியா பவானி சங்கர். இவர் தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது:100வது முறையாக ஐ லவ் யூ செல்கிறேன். நான் உன்னை விரும்புகிறேன். நாங்கள் உங்களை விரும்புகிறோம். ஒவ்வொருவரும் உங்களை விரும்புகிறார்கள். உங்கள் பணியின் மூலம் வாழ்க்கையை அழகாக நீங்கள் மாற்றினீர்கள். மற்ற நாளில் ஒரு மனிதராக இருந்தீர்கள். உங்களின் புன்னகை முகத்துக்கு என் காதலை அனுப்புகிறேன் என மாதவன் படத்தைப் பகிர்ந்து பிரியா பவானி சங்கர் மெசேஜ் வெளியிட்டிருக்கிறார்.

பிரியா பவானி சங்கர் மெல்ல மெல்ல கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார். மேயாத மான் படத்தில் அறிமுகமானவர். மான்ஸ்டர் படத்தையடுத்து குருதி ஆட்டம் பொம்மை, ஓ மணப்பெண்ணே, களத்தில் சந்திப்போம். இந்தியன் 2 ஆகிய படங்களில் நடிக்கிறார். ஏற்கனவே நடிகர் எஸ்.ஜே. சூர்யாவுடன் இவரை இணைத்து கிசு கிசு வெளியானபோது அதற்கு எஸ்.ஜே. சூர்யாவே மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் ப்ரியா பவானி சங்கர் தனது பாய் ஃப்ரண்ட் ஒருவரை இணைய தளத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அவருடன்தான் எங்குபோனாலும் பிரியா சுற்றி வருகிறாராம்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>