செம்பருத்தி சீரியலில் மீண்டும் கார்த்திக் இணைவாரா?? சிந்திக்க வைக்கும் சோசியல் மீடியா பதிவு..!

by Logeswari, Jan 8, 2021, 17:21 PM IST

தனியார் தொலைக்காட்சியில் முதல் முறையாக சினிமா பாணியில் சீரியல் எடுக்கப்பட்டது என்றால் அது செம்பருத்தி சீரியல் தான். இது மற்ற சீரியலை பின்னுக்கு தள்ளி சுமார் மூன்று வருடங்களாக நம்பர் 1 பதவியில் நிலைத்து நிற்கிறது. இதில் ஹீரோயினாக புதுமுகம் ஷபானா அறிமுகமாகி பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சில வருடத்திற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 'ஆபீஸ்' சீரியலில் நடித்து மிகுந்த புகழ் பெற்றவர் தான் கார்த்திக். ஆபீஸ் சீரியல் பிறகு இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரையில் இவரது மார்க்கெட் குறைந்தது. இவர் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரே வருடத்தில் செம்பருத்தி சீரியல் இவரை வெற்றியின் உச்சத்துக்கு கொண்டு சென்றது.

தொட்டது எல்லாம் பொன்னாக மாறியது போல இந்த சீரியலில் இவர் நடிக்க தொடங்கியதிலிருந்து பல திரைப்பட வாய்ப்புகள் அவரை சூழ ஆரம்பித்தது. இதனின் விளைவாய் தான் 'முகிலன்' என்ற திரைப்படத்தில் நடித்து அப்படமும் ஓடிடி தளத்தில் வெற்றியை சந்தித்து வருகிறது. ஆதி பார்வதி இரண்டு கதாபாத்திரத்துக்கும் மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அது மட்டும் இல்லாமல் சோசியல் மீடியாவில் பல ரசிகர் கூட்டங்கள் இவர்களுக்கு இருக்கின்றது. இவர்களது காதல் கெமிஸ்ட்ரி கண்ணுப்படும் அளவிற்கு அழகாக இருக்கும். சில நாளுக்கு முன் முக்கிய கதாபாத்திரத்தில் இருந்த ஐஸ்வர்யா என்கிற ஜனனியை வெளியேற்றி வேற ஒரு புது முகத்தை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தது சீரியல் குழு.

இது மக்களுக்கு பெரும் ஏமாற்றமாய் அமைந்தது. சீரியல் நடிகை ஒருவர் கார்த்திக் மிகவும் ஆணாதிக்கம் உடையவர் என்று பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதன் பிறகு ஒரு சில நாள்களில் கார்த்திக் சீரியலை விட்டு விலகினார். அதன் பிறகு யூடியூப் சேனலில் வேலை செய்து கொண்டு இருக்கிற அக்னி என்பவர் ஆதி கதாபாத்திரத்தை கையாண்டார். ஆனால் செம்பருத்தி சீரியலின் டிர்பி குறைய தொடங்கியது. இதனால் சீரியல் குழு கார்த்திக்கை சந்தித்து மறுபடியும் ஆதி கதாபாத்திரத்தில் நடிக்கும்மாறு கேட்டு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் கார்த்திக் தனது சோசியல் மீடியாவில் ஒரே சூரியன், ஒரே சந்திரன் மற்றும் ஒரே நியாயம் என்று பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading செம்பருத்தி சீரியலில் மீண்டும் கார்த்திக் இணைவாரா?? சிந்திக்க வைக்கும் சோசியல் மீடியா பதிவு..! Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை