இந்திக்கு செல்லும் மற்றொரு பிரபல நடிகை..

by Chandru, Jan 8, 2021, 17:44 PM IST

பாலிவுட்டில் நடித்து அங்கு சரியானா வாய்ப்பில்லாமல் கோலிவுட், டோலிவுட்டில் நடித்து பிரபல நடிகைகளாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்கள் தமன்னா. காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் போன்றவர்கள். மீண்டும் இவர்கள் பாலிவுட்டில் நடித்தாலும் ஆடிக்கொன்று அமாவாசைக் கொன்று என்றுதான் எப்போதாவது ஒன்றிரண்டு படங்களில் நடிக்கிறார்கள். பாலிவுட்டில் சாதிக்கலாம் என்று சென்ற இலியானா இங்கும் கோட்டை விட்டார், அங்கும் கோட்டை விட்டார். அதே போல் கண்ணடி நடிகை ப்ரியா வாரியரும் ஒரு படத்தோடு இந்தியிலிருந்து திரும்பி வந்து விட்டார். பாலிவுட்டில் நடிக்கப் போகிறேன் என்று கனவுடன் சென்ற கீர்த்தி சுரேஷ் உடல் இளைத்துத் திரும்பியதுதான் மிச்சம். ஒரு படமும் நடிக்கவில்லை.

தற்போது மற்றொரு பிரபல நடிகை பாலிவுட் ஆசையில் சென்றிருக்கிறார்.கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் விஜய தேவரகொண்டாவுடன் நடித்து பிரபலம் ஆன ராஷ்மிகா அடுத்து அல்லு அர்ஜுனுடன் புஷ்பா என்ற படத்தில் நடிக்கிறார். தமிழில் கார்த்தி ஜோடியாகச் சுல்தான் படத்தில் நடித்து கோலிவுட்டில் அறிமுகமாகிறார். மற்றொரு தமிழ்ப் படத்திலும் நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் நிலையில் தற்போது இந்தி பட ஆசையில் இருக்கிறார். மிஷன் மஜ்னு என்ற படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். பாகிஸ்தானில் புகுந்து இந்தியா நடத்திய அதிரடி தாக்குதல் பற்றிய கதையாக இது உருவாகிறது.

காதல் கதைக்களமாக அல்லாமல் மாறுபட்ட கதையை ராஷ்மிகா இந்தியில் அறிமுக படமாகத் தேர்வு செய்திருக்கிறார். அவரது முயற்சி எந்தளவுக்குக் கைகொடுக்கும் என்பதை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் மிஷன் மஜ்னு பட ஷுட்டிங்கில் ராஷ்மிகா கலந்து கொண்டு நடித்து வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் அவர் நடிக்கும் புஷ்பா படமும் இந்தியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்