ஆண்மையை அதிகரிக்கும்... ஆயுளை நீட்டிக்கும்... இது சாப்பிட்டுப் பாருங்க!

Advertisement

இரத்தத்தில் சர்க்கரை, இரத்த அழுத்தம் இவை இரண்டும் இன்றைய காலகட்டத்தில் அதிகமாகக் காணப்படும் ஆரோக்கிய குறைபாடுகளாகும். இவற்றுக்கு எதிராக போராட வாழ்வியல் முறையை மாற்றுவது அவசியம். இந்தக் குறைபாடுகள் இதயத்தைப் பாதிக்கக்கூடியவை. இவற்றைக் கட்டுப்படுத்த நல்ல உணவுகளை அனைவரும் தேடுகின்றனர். இன்சுலின் போதாமையால் ஏற்படும் இரண்டாவது வகை நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் இவற்றை கட்டுப்படுத்த வால்நட் உதவுகிறது.

வால்நட்டில் நல்ல கார்போஹைடிரேடு, நார்ச்சத்து மற்றும் தாது உப்புகள் உள்ளன. இவை உடலின் செயல்பாட்டைச் சீராக்கி, உடலிலிருந்து நச்சுப்பொருள்களை வெளியேற்றுகின்றன. நீரிழிவு உள்பட பல்வேறு ஆரோக்கிய கேட்டினை உண்டாக்கக்கூடிய அழற்சியைக் குறைக்கும் தன்மை வால்நட்டுக்கு உள்ளது.

இனப்பெருக்கம்

ஆண், பெண் இருவருக்குமே குழந்தை பாக்கியத்திற்குரிய இனப்பெருக்க ஆற்றலை வால்நட் அதிகரிக்கிறது. ஒமேகா-3 என்ற சத்து இதில் அதிகமாக உள்ளது. ஒமேகா-3 உடலில் அதிகமாகச் சேரும்போது, ஆண்களின் விந்தணுக்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவுகிறது. பெண்களில் கருத்தரித்தலுக்கு ஏற்ற உடல்நலத்தை வால்நட் கொடுக்கிறது.

ஆரோக்கியமான வயிறு

நாம் சாப்பிடும் உணவுகளே நம் வயிற்றின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கின்றன. வயிற்றின் ஆரோக்கியம் கெட்டுப்போனால் முழு உடல் நலனுமே பாதிப்புக்குள்ளாகும். வால்நட் வயிற்றை ஆரோக்கியமாகக் காக்கிறது. வயிற்றில் நல்ல கிருமியை (மைக்ரோபயோட்டா) வால்நட் வளர்க்கிறது. இதன் காரணமாகச் செரிமானம் நன்றாக நடைபெறுகிறது.

மூளைக்கு ஆரோக்கியம்

இக்காலத்தில் முதுமையின் காரணமாக வரும் நினைவுக்குழப்பம், ஞாபக மறதி போன்ற அல்சைமர் பாதிப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரைக்கும் மூளைக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியது வால்நட் ஆகும். வால்நட்டின் உருவமும் மனித மூளையை ஒத்திருக்கிறது என்பது கூடுதல் தகவல். வால்நட்டிலுள்ள ஆரோக்கியமான கொழுப்பு, பாலிபீனால்கள் மற்றும் வைட்டமின் இ ஆகியவை ஆக்ஸிடேடிவ் ஸ்டிரெஸின் அளவை குறைக்கின்றன. இது குறைந்தால் உடல் ஆரோக்கியம் பெறும்.ஞாபக சக்தி, கற்றல் திறன், மூளையின் செயல்திறன் ஆகியவற்றை வால்நட் அதிகரிக்கிறது.

வால்நட்டிலுள்ள சத்துகள்

30 கிராம் வால்நட்டில் 3.89 கிராம் கார்போஹைடிரேடு, 1 கிராம் சர்க்கரை, 2 கிராம் நார்ச்சத்து, 0.72 மில்லி கிராம் இரும்புச் சத்து, 5 கிராம் புரதம் மற்றும் 20 கிராம் கொழுப்பு ஆகியவை அடங்கியுள்ளன. தினமும் 1 அல்லது 2 வால்நட் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?

READ MORE ABOUT :

/body>