கல்லூரி கல்வி இயக்குனராக இருந்த சாருமதி கடந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் பூர்ணசந்திரன் கல்லூரி கல்வி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.இந்தப் பதவிக்குத் தகுதி மற்றும் சீனியாரிட்டி உள்ள தன்னை கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமனம் செய்யாமல் பூர்ணசந்திரன் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து திருவாரூரில் உள்ள திரு.வி.க அரசு கலைக்கல்லூரி முதல்வரான கீதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நியமனத்தில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் , இந்த நேம் இனத்திற்காகத் தகுதி வாய்ந்தவர்கள் யார் யார் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு அதிலிருந்து ஒருவர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. பின்னர் கடந்த அக்டோபர் மாதம் பூர்ணசந்திரன் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.இந்த நிலையில் தற்போது பூரண சந்திரனை மீண்டும் கல்லூரி கல்வி இயக்குநராகத் தமிழக அரசு நியமித்துள்ளது.