பேட்டிங்கின் போது ரகானே தூங்கினாரா ? சமூக வலைதளங்களில் போட்டோ வைரல்

சென்னை டெஸ்ட் போட்டியில் இன்று பேட்டிங் செய்யும் போது துணை கேப்டன் ரகானே தூங்குவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. பேட்டிங் செய்யும் போது தூக்கமா என்று பலரும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினர். ஆனால் உண்மையில் அவர் தூங்கவில்லை. கிடைக்கும் நேரங்களில் இடையிடையே ரகானே தியானம் செய்வது வழக்கம். அதே போலத் தான் இன்றும் பேட்டிங்கின் போது கிடைத்த சிறிய இடைவெளியில் அவர் தியானம் செய்தாராம்.கிரிக்கெட் வீரர்கள் எவ்வளவு தான் சிறப்பாக விளையாடினாலும் கூடவே அதிர்ஷ்டமும் வேண்டும்.

கிரிக்கெட் மட்டுமல்ல, எந்த விளையாட்டுக்கும் அதிர்ஷ்டம் தேவை தான். பல வீரர்களுக்கும் சென்டிமென்டுகளும் உண்டு. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாஹ் விளையாட வரும்போது எப்போதும் ஒரு சிவப்பு துண்டுத் துணியை பாக்கெட்டில் போட்டு விட்டுத் தான் இறங்குவார். நம் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் செய்யும் போது முதலில் இடது காலில் தான் பேடு கட்டுவார். இது அவருக்கு மிகவும் கட்டாயமாகும். மறந்தும் கூட அவர் முதலில் வலது காலில் பேடு கட்டமாட்டார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தன்னுடைய கிரிக்கெட் குருவின் போட்டோவை பாக்கெட்டில் வைத்துத் தான் பேட்டிங் செய்வார். இப்படி பல வீரர்களுக்கு பல சென்டிமென்டுகள் உள்ளன.

இது போலத் தான் இந்திய துணை கேப்டன் அஜிங்கியா ரகானேவுக்கும் ஒரு சென்டிமென்ட் உண்டு. அடிக்கடி கிடைக்கும் நேரத்தில் எல்லாம் தியானம் செய்வது இவரது வழக்கம். பேட்டிங்குக்கு களத்தில் இறங்குவதற்கு முன் கிடைக்கும் நேரத்திலும், பேட்டிங்கின் போது கிடைக்கும் சிறிய சிறிய இடைவேளை நேரங்களிலும் கண்களை மூடி இவர் தியானம் செய்வது உண்டு. இதே போலத் தான் இன்று இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போதும் பேட்டிங்கின் போது கிடைத்த சிறிய இடைவேளையில் நின்று கொண்டே அவர் தியானம் செய்தார். இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டோவை கிரிக்கெட் பத்திரிகையாளர் பாரத் சுந்தரேசன் தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்தார். தற்போது இந்த போட்டோக்கள் சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சில போட்டிகளில் மோசமாக விளையாடிய ரகானே இன்றைய போட்டியில் 149 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
adam-zampa-talk-about-ipl
ஐபிஎல் முக்கியம் என்பவர்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் தெரியும் - கொதிக்கும் ஆடம் ஜாம்பா
brett-lee-donates-1-bitcoin-for-oxygen-supplies-for-india
`பேட் கம்மின்ஸ் இன்ஸ்பிரேஷன்... 40 லட்சம் நிதியுதவி அறிவித்த பிரட் லீ!
bcci-clarifies-players-fear
கவலை கொள்ள வேண்டாம்!.. வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த உத்தரவாதம்
cricket-player-natrajan-surgery
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு காலில் ஆபரேஷன்.. என்ன ஆச்சு??
Tag Clouds

READ MORE ABOUT :