இங்கிலாந்தை போல இந்திய அணிக்கும் இன்று அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. 145 ரன்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அபாரமாகப் பந்து வீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அகமதாபாத் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு 4 விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. போப் 1 ரன்னுடனும், ஸ்டோக்ஸ் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பிங்க் பால் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள மொட்டேரா சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. புதிய பிட்ச் என்பதால் காலையில் பிட்சைப் பரிசோதித்த பின்னரே வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று இரு அணி கேப்டன்களும் கூறியுள்ளனர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடந்து முடிந்தன.
இந்தியாவுக்கும், வெற்றிக்கும் இடையே இன்னும் 3 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. இங்கிலாந்து இன்று உணவு இடைவேளையின் போது 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது.சென்னையில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
சென்னை டெஸ்ட் போட்டியில் இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இங்கிலாந்துக்கு மேலும் 3 விக்கெட்டுகள் பறிபோனது. இதையடுத்து அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
சென்னை கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இங்கிலாந்துக்கு இன்னும் 429 ரன்கள் எடுக்க வேண்டும். கைவசம் 7 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன.
சென்னை டெஸ்ட் போட்டியில் 3வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற இங்கிலாந்துக்கு 429 ரன்கள் எடுக்க வேண்டும்.சென்னை டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது.
இந்தியா இன்று 2வது இன்னிங்சில் 286 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இங்கிலாந்தை விட இந்தியா 481 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அஷ்வின் அபாரமாக ஆடி சதமடித்தார். இங்கிலாந்து மீண்டும் இரண்டாவது இன்னிங்சை தொடங்கி உள்ளது.
காலையிலேயே இந்தியாவுக்கு அடுத்தடுத்து 5 விக்கெட்டுகள் பறிபோன நிலையில் 7வது விக்கெட்டுக்கு கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த அஷ்வின் அதிரடியாக ஆடி வருகிறார். உணவு இடைவேளையின் போது இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.