விறைப்புத் தன்மை குறைபாட்டை போக்கும் எலும்புக்கு பெலன் தரும்... இதை சாப்பிடுங்க!

இலை, காய், பட்டை, பிசின் என்று முருங்கை மரத்தின் பயன்கள் அதிகம். மரம் முழுவதுமே பயன் நிறைந்ததாக இருப்பதால் சிலர் அதை 'அற்புத மரம்' என்று அழைக்கின்றனராம்.

முருங்கை கீரையில் உள்ள சத்துகள்
100 கிராம் முருங்கை கீரையில் 6.78 மில்லி கிராம் வைட்டமின் ஏ, 0.06 மில்லி கிராம் தையமின், 0.05 மில்லி கிராம் ரிபோஃபிளேவின், 220 மில்லி சென்டிகிராம் வைட்டமின் சி, 440 மில்லிகிராம் கால்சியம் (சுண்ணாம்பு சத்து), கார்போஹைடிரேடு 12.5 மில்லி கிராம், கொழுப்பு 1.70 மில்லி கிராம், நார்ச்சத்து 0.90 மில்லி கிராம், இரும்பு சத்து 0.85 மில்லி கிராம், புரதம் (புரோட்டீன்) 6.70கிராம், 92 கலோரி (ஆற்றல்) ஆகியவை அடங்கியுள்ளன. முருங்கை கீரை சாற்றில் பொட்டாசியம், துத்தநாகம் (ஸிங்க்), மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவையும் உள்ளன. காரட், ஆரஞ்சு, பால் இவையெல்லாவற்றை காட்டிலும் அதிக சத்து முருங்கையில் அடங்கியுள்ளது. ஃபோலேட் (வைட்டமின் பி9), நையசின் (வைட்டமின் பி3) உள்ளிட்ட துணை சத்துகள் அதிகமுள்ள முருங்கையில் கொழுப்புச் சத்து குறைவு. கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் எல்டிஎல் இதில் இல்லவே இல்லை.

ஈரலுக்கு நல்லது
சில மருந்துகள் நம் ஈரலை சேதப்படுத்தக்கூடும். முருங்கை இலை சாறு ஈரலை காக்கக்கூடியது. ஈரல் தொடர்பான உடல் நல கோளாறுகள் உள்ளவர்கள் முருங்கை இலை சாறு அருந்தவேண்டும்.

வயிற்றுக்கு நல்லது
பழங்கள், காய்கறிகளே வயிற்றுக்கு நல்லது; செரிமானத்திற்கு உதவும் என்று நாம் நினைக்கலாம். முருங்கை கீரையில் வயிற்றுக்கு பாதுகாப்பு தரும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. மலச்சிக்கல் உள்ளிட்ட வயிறு தொடர்பான பிரச்னைகளை முருங்கை கீரை தீர்க்கும். வயிற்றுக்குள் தீமை தரும் கிருமிகள் வளராமல் தடுப்பதன் மூலமும் அதிக நார்ச்சத்து மற்றும் செரிமானத்தை ஊக்குவிக்கும் வைட்டமின் பி இருப்பதினாலும் முருங்கை கீரை வயிற்றை ஆரோக்கியமாக காக்கிறது.

எலும்புக்கு நல்லது
எலும்புக்கு ஆரோக்கியம் தருவதற்கு எதை சாப்பிடலாம் என்று யோசித்தால், முருங்கை அதற்கான பதிலாகும். கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற சத்துகள் முருங்கையில் உள்ளன. அவை எலும்பை உறுதியாக்க உதவுகின்றன. முடக்குவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் வராமல் முருங்கையிலுள்ள அழற்சிக்கு எதிரான பண்பு காக்கிறது.

விறைப்பு தன்மை
ஆண்களுக்கு உள்ள விறைப்புத் தன்மை குறைபாட்டை முருங்கை போக்கும் என்று நம்பப்படுகிறது. ஆண்குறியில் இரத்த ஓட்டம் குறைவு, இரத்தக்கொதிப்பு, இரத்தத்தில் கொழுப்பு அதிகமாக காணப்படுதல், நீரிழிவு இவற்றின் காரணமாக விறைப்புத் தன்மை ஏற்படாமல் போகலாம். முருங்கை கீரையில் உள்ள பாலிபீனால்கள், நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியை தூண்டி, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது; இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ஆகவே, விறைப்பு தன்மை குறைபாடு உள்ளவர்கள் இதை சாப்பிட்டுப் பார்க்கலாம்.

இதயத்திற்கு நல்லது
முருங்கை இலை மற்றும் முருங்கை காயில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள்) இருப்பதால், அவை இருதயத்தை பாதுகாக்கின்றன. சரியான வயதில் முருங்கை கீரை அதிகமாக சாப்பிட்டால் இருதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

நீரிழிவு பாதிப்பு
முருங்கை கீரை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கிறது. ஆகவே நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் இதை சாப்பிடலாம். முருங்கை இலைச் சாறு தவறாமல் அருந்தி வந்தால் ஹீமோகுளோபின் (இரத்த சிவப்பு நிறமி) செயல்பாடு அதிகரிக்கும்.

ஆஸ்துமா
சுவாச கோளாறுகளை குறைக்கும் ஆற்றல் முருங்கை இலைக்கு உள்ளது. நுரையீரலின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. சிறுநீரக கோளாறு, பார்வை கோளாறு, சரும பாதிப்பு இவற்றையும் போக்கக்கூடிய மருத்துவ குணம் முருங்கை காய் மற்றும் இலைக்கு உள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?

READ MORE ABOUT :