பிரபல நடிகர் அஜீத் பெரும்பாலும் பொது நிகழ்வுகளிலிருந்து விலகி இருக்கிறார், அதனால் அவர் தனது சொந்த படங்களின் விளம்பர நிகழ்வுகளிலும் ஒருபோதும் பங்கேற்பதில்லை. ஆனால் தனது ஓய்வு நாட்களில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க தவறுவதில்லை. மேலும் தனது தனித்திறமைகளையும் ஒருபோதும் விட்டுக்கொடுப்பதில்லை. பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல், ஆளில்லா விமான டெக்னிக் பயிற்சி அளிப்பது என தனது ஆளுமையை வெளிப்படுத்த தவறுவதில்லை. தற்போது அஜீத்குமார் சைக்கிள் சுற்றுப்பயணத்தின் சில படங்கள் இணையத்தில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றன.
தனது நண்பர்களுடன் சுமார் 30,000 கி.மீ. பைக்கில் பயணம் செய்து சமீபத்தில் சாதனை செய்தார். நடிகர் சமூக நிகழ்வுகளிலிருந்து விலகி இருந்தாலும், அவர் எப்போதும் ரசிகர்களின் கேமராவுக்கு தப்புவதில்லை. அவரை ரசிகர்கள் எங்கு கண்டாலும் அருகில் நின்று செல்ஃபி எடுத்து நெட்டில் பகிர்கின்றனர். முன்னதாக அவர் சென்னையிலிருந்து ஐதராபாத், பின்னர் வாரணாசி போன்ற இடங்களுக்கு பைக்கிலேயே சென்று படப்பிடிப்பிடிப்பில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத் ஆடம்பர கார் ரேஸ் பைக் என சொந்தமாக கோடிகளை கொட்டி வாங்கி இருந்தாலும் அதை அதிகம் வெளிக்காட்டாமல் எளிமையான வாழ்க்கையை அதிகம் விரும்புகிறார்.
அஜீத் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். எச்.வினோத் இயக்குகிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிகட்ட காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது. அத்துடன் இதன் படப்பிடிப்பு முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. போனி கபூர் தயாரிக்கும் இப்படம் பல மொழிகளில் வெளியிடவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், விஷ்ணுவர்தன் இயக்கிய அஜித்தின் 2007 ஆம் ஆண்டு அதிரடி படம் 'பில்லா' மார்ச் 12 ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட உள்ளது.