தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..

by Logeswari, May 4, 2021, 15:49 PM IST

நமது நாட்டின் பாரம்பரியமான மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் தாவரங்கள், மூலிகைகள் போன்றவற்றின் மருத்துவ குணங்களை பற்றி மட்டும் கூறாமல் விலங்குகளிலிருந்து பெறப்படும் பொருட்களால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றியும் கூறியிருக்கின்றனர். அந்த வகையில் அக்காலம் முதலே பசும்பால் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களையும் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

இந்த ஒவ்வாமை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் பாலில் இருக்கும் கேசின் எனப்படும் கொழுப்பு சத்தாகும். ஆனால் நெய் என்பது பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட வெண்ணையை உருக்கி செய்யப்படுவதால் நெய்யில் இந்த கேஸின் கொழுப்பு சத்து இல்லாமால் போகிறது. எனவே இந்த லாக்டோஸ் இண்டாலரன்ஸ் குறைபாடு இருப்பவர்களும் நெய் தாராளமாக சாப்பிடலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அதேபோல் கண் பார்வை தெளிவாக இருக்கவும், எலும்புகள் வலிமை பெறவும் வைட்டமின் ஈ சத்து அதிகம் தேவைப்படுகிறது. நெய்யில் இந்த இரண்டு வைட்டமின் சத்துக்களும் அதிகம் நிறைந்திருக்கிறது. எனவே தினந்தோறும் உணவில் சிறிது நெய் சேர்த்து சாப்பிடுவதால் மேற்கூறிய இரண்டு சக்திகளும் கிடைக்கப் பெற்று உடல் ஆரோக்கிய நிலை மேம்படுகிறது. இந்த வேதிப்பொருட்களுக்கு வைரஸ் கிருமிகளை எதிர்த்து செயல்புரியும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்ததாக இருக்கிறது.

இவை உடலை பாதிக்கும் எத்தகைய வைரஸ் கிருமிகளையும் எதிர்த்து செயல் புரிந்து உடல் நோய்வாய்ப்படாமல் தடுக்கிறது. மனிதர்களின் வயிற்றின் குடற்சுவற்றில் உணவு செரிமானம் ஆவதற்கு உதவும் நன்மை செய்யும் பாக்டீரியா நுண்ணுயிர்கள், உணவில் இருக்கும் நார்ச்சத்தை பியூடைரிக் அமிலமாக மாற்றிக் கொள்கிறது. இந்த நுண்ணுயிரிகளுக்கு வலுசேர்க்க பியூடைரிக் அமிலம் நிறைந்த நெய்யை அடிக்கடி சாப்பிடுவதால் உணவு செரிமானம் ஆவதில் குறைபாடுகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

You'r reading தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்.. Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை