முட்டை, நட்ஸ், ஊட்டச்சத்தின் ஊற்று!

Advertisement

இந்த 8 உணவு உங்க கிச்சன்ல இருக்கணுங்க..!

உணவே மருந்து மருந்தே உணவு. நாம் உட்கொள்ளும் உணவு, உலகத்திலேயே சிறந்த மருந்தாகவும் மாறலாம். சரியான உணவை சரியான முறையில் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் அது பொறுமையாக உட்கொள்ளப்படும் நஞ்சாகவும் உருவெடுக்கலாம். சில சாமர்த்தியமான திட்டமிடல் இருந்தால், ஆரோக்கியமான உணவுகளை எப்போதும் சாப்பிடும்படி பார்த்துக் கொள்ளலாம்.

உங்கள் கிச்சனில் இருக்க வேண்டிய ஊட்டச்சத்து மிகுந்த 8 உணவுகள் குறித்து நியூட்ரீஷனிஸ்ட் பூஜா மல்ஹோத்ரா கூறுகிறார்.

முட்டை,

முட்டைகள் என்பது புரதச் சத்தின் ஊற்று. மிகக் குறைந்த விலையில் மிக அதிக புரதச் சத்து முட்டையில் கிடைக்கும். அதையும் தாண்டி, பி2, பி6, பி12 மற்றும் டி விட்டமின்கள் முட்டையில் அதிகம். ஒரு முட்டையில் 6 கிராம் அளவு கொண்ட புரதச் சத்து இருக்கும். முட்டையின் கருவிலும் ஏ,டி,ஈ மற்றும் கே விட்டமின்கள் அதிகம்.

நட்ஸ்,

நட்ஸ், என்பது குறைவாக எடுத்துக் கொண்டாலும் நிறைவான சக்தியைத் தரும். சேமித்து வைப்பதற்கும், பயணங்களின் போது எடுத்துச் செல்வதற்கும் நட்ஸ் சிறந்தவை. குறிப்பாக, பகலில் வெகு நேரம் சாப்பிட முடியாத நேரத்தில், நமது கையில் நட்ஸ் இருந்தால் அது பெருமளவு கை கொடுக்கும். நட்ஸ்களில் அதிக கொழுப்புச் சத்து இருக்கும். அதையும் தாண்டி, ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 ஃபேட்டி அமிலம், நார்சத்து, ஊட்டச்சத்துள்ள பல விட்டமின்கள் கிடைக்கப் பெறும். பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட், ரெய்சின் உள்ளிட்ட அனைத்து நட்ஸ்களும் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தவை.

கொட்டைகள்,

பூசணி, அலிவ், எள், முலாம்பழம் உள்ளிட்டவைகளின் விதைகள் அதிக சத்துடன் இருக்கும் கொட்டை வகைகள் ஆகும். அதை, சாலட்களில் போட்டோ, லட்டு போன்ற இனிப்பு வகைகளில் சேர்த்தோ, அரைத்து சமைக்க பயன்படுத்து மாவுகளில் கலந்தோ உட்கொள்ளலாம். பல நல்ல கொழுப்புச் சத்துகள், நார்சத்து, விட்டிமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களும் இந்த கொட்டை வகைகளில் அதிகம் கிடைக்கும். தொடர்ச்சியாக அதை உட்கொள்வது உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தரும்.

பழம் மற்றும் காய்கறி,

உங்கள் உணவுத் தட்டில் அதிக வண்ணங்களில் ஆன பழங்கள் மற்றும் காய்கறிகள் இருக்கிறதென்றால், அந்த அளவுக்கு வெரைட்டியான சத்துக்களும் உங்கள் உடலில் இருக்கும் என்ற அர்த்தம். உள்ளூரில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது சாலச் சிறந்தது ஆகும். மிகவும் பாதுகாப்பானது இந்த இரண்டு வகை உணவுதான். உங்கள் பாக்கெட்டையும் இந்த வகை உணவுகள் பதம் பார்க்காது. அதிக சத்து வேண்டுமென்றால் அதிக பழம் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்.

வாழைப்பழம்,

வாழைப்பழம் என்பதை பலர் முக்கிய சத்துள்ள உணவாக கருதுவதில்லை. ஆனால், உண்மை வேறு. நார்சத்து இந்த பழத்தில் அதிகம் என்பதால், நீரிழிவு நோய் இருப்பவர்களும் உட்கொள்ளலாம். இதயத்தையும் உயிர்ப்போடு வைத்திருக்கும் சத்துகள் வாழைப்பழங்களுக்கு இருக்கிறது. காலையில் எழுந்தவுடன் கூட வாழைப்பழத்தை சாப்பிடலாம். காலைப் பசியையும் போக்கி, நாளுக்குத் தேவையான சத்தையும் கொடுக்கும்.

யோகர்ட்,

புரதச்சத்து, கால்சியம், விட்டமின் ஏ, பி2, பி12 ஆகிய ஊட்டச்சத்துகள் இருப்பதால், எலும்புக்கும் பற்களுக்கும் யோகர்ட் ஒரு சிறந்த உணவு. மதிய உணவுடன் யோகர்ட்டை சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும்.

வறுத்த கடலை,

இந்தியா முழுவதும் ஒரு நல்ல ஸ்னாக் உணவாக இருப்பது வறுத்த கடலை. இந்தக் கடலை விலையில் குறைவாகவும், சத்துகளில் அதிகமாகவும் இருக்கும் ஒரு உணவு. அரை கப்பில் இருக்கும் வறுத்த கடலையில், 130 கலோரிகளும் 7 கிராம் புரதச்சத்தும் இருக்கும். கால்சியம், மக்னீஸ்யம், பொட்டாசியம் போன்ற சத்துகளும் அதிகம் வறுத்த கடலையில் உள்ளது.

க்ரீன் டீ,

க்ரீன் டீயில் இருக்கும் ஆரோக்கியம் குறித்து எவ்வளவோ படித்துவிட்டோம். இருந்தும், அதன் மிகப் பெரிய விஷயம், ஸ்ட்ரெஸ்ஸை ரிலீவ் செய்யும் அருமருந்து ஆகும். ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் அதிகம் இருக்கும் இந்த டீயை அடிக்கடி உட்கொள்ளலாம்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?
/body>